நம் தமிழ்நாட்டில் ஹிந்தியை எதிர்த்து பல போரட்டங்கள் நடத்தினார்கள், அதனால் இன்று அந்த துன்பத்தை நம் அனுபவிக்கிறோம். பிழைப்பதற்காக வேறு ஊருக்கு செல்லும் நம் மக்கள் ஹிந்தி தெரியாமல் எவ்வளவு சிரமபடுகிரர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். ஒரு இடத்திற்கு போக வலி கூட கேட்க தெரியாமல் மிகவும் சிரமபடுகிரர்கள்.
நான் மும்பை வரும் பொழுது என்னுடன் ஏழு பேரு வந்தார்கள். எங்களில் சில பேருக்கு ஹிந்தி தெரியும். அதனால் ஓரளவு எங்களால் சமாளிக்க முடிந்தது.
நாங்கள் ஒன்றாக வராமல் தனியாக வந்திருந்தால் எங்களால் கண்டிப்பாக சமாளித்து இருக்க முடியாது. மொழி தெரியாதலால் வீடு எடுத்து தங்க நங்கள் இரண்டு மாத வாடகை இடைதரக்ர்கு குடுக்க வேண்டியதாக போயிற்று. எங்களால் அவர்களுடன் பேரம் பேச முடியவில்லை.
வேலை செய்யும் இடத்திலும் மொழி தெரியம் மிகவும் சிரமப்பட்டோம். ஒரு கடைக்கு பொய் ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றால் ஹிந்தியில் பெயர் தெரியாமல் அதை தேடி கண்டுபிடித்து அதற்கு சைகையில் விலை கேட்டு வாங்கவேண்டும். கடைகாரர்க்கு இங்கிலீஷ் தெரிதிருன்த்தால் இங்கிலிஷில் விலை கேட்டு பொருள் வாங்கலாம் , ஆனால் அவனுக்கு இங்கிலீஷ் தெரியவில்லை என்றல் நம் படு திண்டாட்டம் தான். நல்ல வேலை நம் தலைவர்கள் ஆங்கிலத்தை எதிர்த்து போராடவில்லை , போராடீருந்தால் நம் அனைவரும் தமிழ்நாட்டில் மட்டும் உட்கார்திருக்க வேண்டும்.
ஆன்று எதிர்த்தவர்கள் பிர்கலத்தை பற்றி யோசிக்காமல் அரசியல் லாபத்திற்காக நம்மை பயன்படுதிக் கொண்டார்கள். அதனால் நாமாவது நமது குழந்தைகளை தமிழ், ஆங்கிலம் இவற்றோடு இல்லாமல் ஹிந்தி கற்று கொடுப்போம். இதனால் ஹிந்தி தெரியாமல் நாம் படும் கஷ்டத்தை அவர்கள் பட மாட்டார்கள்.