இந்துக்களின் சமய சின்னங்களுள் ஒன்று "விபூதி". விபூதி என்பது ஓர் வடமொழிச் சொல்லாகும். இச்சொல்லை தான் நாம் தமிழில் திருநீறு என்று அழைக்கிறோம். இது தவிற பசுமம், சாரம், இரட்சை, பசிதம் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
விபூதி நமக்கு உணர்த்தும் செய்தி:
மனிதன் குடிசையில் வாழ்ந்தாலும், மாடி மேல் மாடி கட்டி வாழ்ந்தாலும், இறுதியில் மனிதன் என்பவன் "ஒருபிடி சாம்பல்" தான் என்ற உலகத்தின் நிலையற்ற தன்மையை நாம் உணர்வதுடன், பிறருக்கும் உணர்த்துவதற்கு தான், நாம் அனைவருக்கும் தெரியும் படி விபூதியை அணிகிறோம்.
விஞ்ஞான பார்வையில் விபூதி:-
* பசுஞ்சாணம் அனுக்கதிர் இயக்கத்தால் ஏற்படும் ஆபத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் சக்தி உடையது என்று ரஷிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். (விபூதி பசுஞ்சாணத்தில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது)
* விபூதியை உடலில் திரிப்பதால் கிருமிகள் அழிக்கப்படுவதுடன், வியர்வையால் ஏற்ப்படும் துற்நாற்றத்தைப் போக்குகிறது.
* கண்ணேற்றால் (கண் திஷ்ட்டி)ஏற்படும் தீங்குகளை தடுக்கிறது. (அறிவியல் கண்ணோட்டத்தில், கண்ணேறு என்பதை பிறரால் நமக்கு ஏற்படும் Negative energy என்று கூறுகின்றனர்)
* நம் நெற்றியில் பூசும் திருநீற்றால், நமது ஞாபக சக்தி அதிகரிக்கிறது.
* குழித்தவுடன் திருநீறு அணிவதால், தலையில் உள்ள நீர்க்கட்டு அகல்கிறது.
*தலைவலி, திருநீறு அணிவதால் சரி செய்யப்படுகிறது.
அணியும் முறை:-
* விபூதியை கிழக்கு முகமாகவோ, வடக்கு முகமாகவோ இருந்து கொண்டு திரித்தல் வேண்டும்.
* விபூதியை காலையிலும், மாலையிலும் நீராடிய உடனும், பூசை செய்யும் முன்னும், பூசை முடிந்த பிறகும், தூங்க செல்லும் முன்னும், வெளியே செல்லும் முன்னும், உணவு உண்ணும் முன்னும் சிவ சிந்தனையுடன் திரித்தல் வேண்டும்.
* விபூதியை தரையில் விழாதவாறு பூச வேண்டும். தவறுதலாக வழுத்தால், விபூதியை கால்கள் மிதிபடாத வண்ணம் துடைத்தேடுத்திட வேண்டும்.
பாடல்:-
மண் அதனில் பிறந்து எய்த்து
மாண்டு விழக் கடவேனை,
எண்ணம் இலா அன்பு அருளி,
எனை ஆண்டிட்டு, என்னையும் தன்,
சுண்ண வெண்நீறு அணிவித்து
தூநெறியே சேரும் வண்ணம்
அண்ணல் எனக்கு அருளிய
வாறு யார்பெறுவார்? அச்சோவே"
-மாணிக்கவாசகர். ஓம் நமசிவாய
No comments:
Post a Comment