Tuesday, November 23, 2010

தொலைகாட்சியாக மாற வேண்டும் !!


எனக்கு இமெயிலில் வந்த சுவாரசியமான கதை.....

ஒரு பள்ளியில் ஆசிரியை மாணவர்களிடம் கடவுளுக்கு நீங்கள் யாரை போல வர வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதுமாறு கூறுகிறார். அனைத்து மாணவர்களும் அவர்கள் என்னவாக ஆக விரும்புகிறார்களோ அதை கடவுளுக்கு ஒரு கடிதமாக எழுதி கொடுத்தார்கள்.

ஆசிரியை அதை எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்று படித்து பார்த்தார். ஒருவன் டாக்டர், பொறியாளர், ஆசிரியர் என்று பலவாறு எழுதி இருந்தார்கள். ஒரு மாணவனின் கடிதத்தை எடுத்து பார்த்து விட்டு கண்ணிற் விட்டு அழ தொடங்கிவிட்டார்.  அந்த நேரம் பார்த்து அவள் கணவன் அங்கு வர , அவனிடம் அந்த கடிதத்தை கொடுத்து படிக்க சொன்னாள்.

அந்த கடிதத்தில் ஒரு மாணவன்  கடவுளிடம்,  கடவுளே  என்னை தொலைகாட்சியாக  மாற்றிவிடு, இன்றிலுருந்து நான் அதனுடைய இடத்தை பிடித்து கொண்டு தொலைகாட்சி போல் வாழ வேண்டும்.  எனக்கு என்று ஒரு தனி இடம், மேலும் என்னை சுற்றி எனது குடும்பத்தார் உட்கார்து இருப்பார்கள். 

அப்பொழுதுதான் நான் பேசும்பொழுது  உன்னிப்பாக கவனிப்பார்கள், நான் தான் எல்லோருடைய கவனத்திலும் இருபேன், மேலும் நான் என்ன சொல்லுகிறேன் , அல்லது என்ன கேட்கின்றேன் என்று கவனிப்பார்கள். மற்றும் எல்லோரும் என்னை தொலைகாட்சியை போல் வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் அக்கறையோடு கவனிப்பார்கள்.

மேலும் நான் தொலைகாட்சியாக இருந்தால் , என் அப்பா அலுவலகத்தில் இருந்து எவ்வளவு தளர்ச்சியோடு திரும்பி வந்தாலும் என்னோடு சிறிது நேரம் இருப்பார்.  என் அம்மா எவளவு சோகமாக இருந்தாலும் என்னை ஒதுக்காமல் இருப்பார், மேலும் என்னுடைய சகோதரர்கள் என்னுடன் இருப்பதற்கு சண்டை போட்டுகொல்வார்கள். என்னுடைய குடும்பம் எனக்காக சில முக்கிய நிகழ்சிகளை  விட்டுவிட்டு என்னுடன் நேரம் செலவலிபதற்காக வருவார்கள். அப்புறம் நான் கண்டிப்பாக மெகா சீரியல் ஒலிபரப்பு ஆகாத தொலைகாட்சியாக , எனது குடும்பத்தை மகிழ்ச்சியாக வயதிருக்கும் தொலைகாட்சியாக  மாற வேண்டும்.

கடவுளே நான் உன்னிடன் ஒன்றே  ஒன்று தான் கேட்கின்றேன், எப்படியாவது என்னை தொலைகாட்சியாக மாற்றிவிடு. இப்படி அந்த கடிதில் எழுதி இருந்தது  இதை படித்து கொண்டு இருத்த கணவன் மனைவிடம்,  இந்த பையனின் அப்பா, அம்மா எவ்வளவு  மோசமானவர்கள், பிள்ளையிடம் கொஞ்சநேரம் செலவழிக்காமல் இப்படி தொலைகாட்சி பார்த்து கொண்டு இருகிறார்கள் என்று கூறினான். உடனே அவன் மனைவி அவனை பார்த்து இந்த கடிதம் எழுதியது யாரோ ஒரு மாணவன் கிடையாது நமது புதல்வன் தான் என்று கூறினால்.  கணவன் வாய்யடைத்து  போய் நின்றான்.

Monday, November 22, 2010

நிஜமான காதல் கடிதம்!!!!!





நான் நிறைய ப்ளாக் படிப்பது வழக்கம். அப்படி படிக்கும் பொழுது  இந்திராவின் கிறுக்கல்கள்  என்ற ப்ளோகில் இந்த சுவாரஸ்யமான காதல் கடிதத்தை கண்டேன்.


நீங்களும் படித்து பாருங்கள். 

To ,
ANU
UKG A.

Dear ANU,

I love you. My dream I see you. Everywhere you. You no, I live no.
I come red shirt 2morrow. You love I, you come red frock. I wait down
mango tree. You no come, i jump train. Sure come...

yours lovely,
VICKY
Std 1 ப 



மேல் உள்ள காதல் கடிதத்துக்கு வந்துள்ள பதில் கிழே :




Reply....by ANU....

Darling, your letter mama see. Papa beat me beat me so many beat me.
I cry. i cry. So no come to mango tree. No jump train. I love you.
See another day. I no red frock. Only green.

You love me, you love me you green shirt. Give I gift. I see you with pinky.
Where you go.. NO talk to her. Okay My dream also only you

Lovely
ANU...

UKG


காலம்  மாறி விட்டது.  ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை.


Sunday, November 21, 2010

சும்மா ஒரு மொக்க ப்ளாக்

நான் என்னுடைய ப்ளாக்ஜ தூய தமிழ் ப்ளாக் ஆக மேல்ல மேல்ல மாற்ற முயற்சித்து கொண்டு இருகின்றேன்... நான் தமிழில் ப்ளாக் எழுத காரணம் எனக்கு தமிழ் படிக்க தெரியும் ஆனால் பிழை இல்லாமல்  எழுத தெரியாது, படிக்கும் காலங்களில் நான் தமிழில் மட்டும் தான் குறைந்த மதிப்பெண் வாங்குவேன்.(மத்ததுல எல்லாம் 100 /100 வாங்கிட்டியாடானு கேட்க கூடாது.) அதனால தான் தமிழில் ப்ளாக் எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அதன் படி இப்பொழுது தமிழில் எழுதி வருகின்றேன்...


குறிப்பு:  என்னடா மொக்க தனமா ப்ளாக் எளுதுரன்ன்னு நினைக்குறீங்களா
அட நான் வேலையை விட்டுவிட்டேன். இப்பொழுது நோட்டீஸ் பெரயொடில்  இருகின்றேன். அதனால் பொழுது போகாமல் ஆபீஸ் வந்த உடன் இந்த ப்ளாக் எழுதுகிறேன். அடுத்த வேளையில் ஜனவரி மதம் தான் சேருவேன் அது வரை இந்த மாதிரி எதாவது மொக்கைய தான் எழுதுவேன்.

எவ்வளவு தான் எழுதினாலும் ஒரு பக்கம் வர மாட்டிங்குது.....  இன்னும் நல்ல மொக்க போடா ட்ரை பண்ணனும்..

Thursday, November 18, 2010

முதல் வீடியோவுடன் ப்ளாக்...

மத்த ப்ளாக் படிக்கும் பொது எப்படி த ப்ளாக் ல வீடியோ போடுறாங்க அப்படினு யோசிச்சேன் , google ல தேடுனேன் இப்போ இந்த கிரேட் வீடியோ add  பண்ணிட்டேன்.  ஏன்டா முதன் முதல ஒரு வீடியோ ப்ளாக் போடுற அது ஏன்டா இந்த மாதிரி கேவலமான வீடியோ upload பன்றேன்னு  கேட்குரீங்களா, உங்களோட பிஸியான வாழ்க்கையல நம்ம T.R கோவமா  பேசுறத பார்த்து சிரிச்சுட்டு போங்க.



T Rajendar (Next Tamil Nadu CM) vs Ananda Vikatan Part 1

Thursday, November 11, 2010

நல்ல நாள் அதுவுமா ஏன்டா குடிகுறீங்க


   இந்நாட்டின் உண்மையான குடிமக்கள்  யாரும் எந்த ஒரு நிகழ்வும் இல்லாமல் குடிபதில்லை. அதாவது குடிபவர்கள் எல்லாம் எதாவது ஒரு காரணத்தை சொல்லிக்கொண்டு தான் குடிகிரர்கள். இவர்கள் சொல்லும் காரணம் மட்டும் வித்தியாசமாக இருக்கும். உதரணத்திற்கு இன்னைக்கு நான் மிகவும் சந்தோசமாக இருகின்றேன் அதனால் நான் குடிக்குரேன் என்று கூறுவான். என் சந்தோசமாக இருந்தால் எதாவது ஒரு நல்ல காரியம் செய் அத விட்டுட்டு சந்தோசமா இருக்கு குடிக்குரேன் , இல்லனா துக்கமா இருக்கேன் அதனால குடிக்குரேன். வீட்டுல பிரிச்சனை  அதனால குடிக்குரேன், கடன் தொல்ல , காதல் தோல்வி இப்படி பல காரணம்கள் குடிபவர்களுக்கு இருக்கு அதனால் நான் அவர்களை தவறாக நினைப்பது இல்லை.


நாலு நண்பர்கள் ஒன்றாக சேர்த்தல் போதும் உடனே  மச்சான் எங்க டா சரக்கு அடிக்க போலாம். அப்புறம் யாராவது ஒருத்தனுக்கு பிறந்தநாள் வந்த போதும் உடனே மச்சி எப்படா சரக்கு வாங்கி தருவ. ஏன்டா ஒரு சாக்லேட் கேக்கலாம் அல்லது வேற எதாவது கேக்கலாம் அத விட்டுட்டு சரக்கு அடிக்க போலாம்ன எப்படிடா. 

ஒரு பண்டிகை அல்லது வீட்டுல விசேசம் நா முதல ஆளா சென்று நம்ம திருவாளார்  பொது ஜனம், உண்மையான இந்த்திய குடிமகன் முதலில் செய்வது என்னவென்றால் டாஸ்மாக் சென்று குடித்து விட்டு வருவது. குடித்து விட்டு அமைதியா வந்தால் பரவில்லை ஆனால் நமது குடிமகன் அப்படி இல்லை யாரிடமாவது வம்பு பேசுவது அல்லது அவதுறு பேசுவது இப்படி அல்லபரை பண்ணிக்கொண்டு நாடு தெருவில் விழுந்து கிடப்பார்.வீட்டில் வந்திருக்கும் உறவினர்கள் எல்லாம் இவனை சபித்துவிட்டு அல்லது இவனுடைய நிலைமையை கண்டு நொந்து போவர்கள். வீட்டின்  நிம்மதி அங்கு போய்கொண்டு இருக்கும்.

இப்படி குடித்து வீட்டு சுய நினைவே இல்ல்லாமல் எதற்கு குடிக்க வேண்டும். எதாவது நினைப்பு இருந்தால் பரவில்லை, குடித்து விட்டு வந்தி எடுப்பது, நாலு நாள் தலை வலிக்குது நு உட்கார்து இருக்குறது இது எல்லாம் தேவையாடா. குடிக்கும் பொது சிலர் இருக்கனுங்க குடிச்சதுகு அப்புறம் தான் அவங்களுக்கு அவனோட குடும்பத்து மேல்ல பாசம் வரும். பொண்டாட்டி தாலிய வித்து தண்ணி அடிச்சுஇருப்பான் ஆனா குடிச்சுட்டு புலம்புவான் நான் பாவி தாலிய வச்சி குடிசுடேன்ன்னு.  இதுல வேற பேசுவானுங்க நாங்க எல்லாம் இல்லாட்டி இந்தியா வோட பொருளாதரமே படுதுரும்னு. நீ குடிக்கமா வேலைய பாருடா தன்னால இந்தியாஓட பொருளாதாரம் வளர்ந்துடும்.




குடிச்குரதுனால உடம்பு கேட்டு போகுமடா நு சொன்ன எவன் கேட்குறான். டை மச்சி எப்பவாவது குடிச்ச ஒன்னும் ப்ரோப்லேம் இல்லைடா டெய்லி குடிச்ச தான் டா ப்ரோப்லேம் நு சொல்லுறன். இதுல சிலர் இருக்கனுங்க wine குடிச்ச வெள்ளை ஆகிடுவேன்னு  சொல்லிக்கிட்டு குடிச்குரன்னுங்க இவனுங்களா எல்லாம் எப்படி திருத்துவதுனு தெரியல்ல.



எனக்கு பிடக்காத ஒரு பழக்கம் தண்ணி அடிப்பது. எவ்வளவு நெருங்கிய நண்பனா இருந்தாலும் அவன் தண்ணி அடிக்கும் பொழுது எனக்கு எதிரி, அவன் அப்பொழுது உயிருக்கு போராடி கொண்டு இருந்தாலும் உதவி செய்ய மாட்டேன். அது என்னானு தெரியாது எவனாவது குடிக்குறதா பார்த்தாலோ அல்லது குடிச்சுட்டு பக்கதுல வந்தா எனக்கு கோவம் வந்துவிடுகிறது. அது ஏன் என்று தெரியவில்லை.

குறிப்பு :
அப்பாடி பொழுதுபோகல , அதனால சும்மா எதாவது எழுதனும்னு இந்த ப்ளாக் எழுதி இருக்கேன். சும்மா ஒரு attendence அவ்வளவு தான். ப்ளாக் எண்ணிக்கைய அதிகரிக்க இந்த மாதிரி ஒரு ப்ளாக்.