Wednesday, April 17, 2013

பெண்கள் ரொம்ப ஷார்ப்

(பெண்களின் மூளை சிறுசுதான்ஆனா திறமை ரொம்ப பெருசுஆய்வில் தகவல்)


**Women may have smaller brains than men, but they are more efficient at completing a task, a new study has claimed. It has been a mystery for scientists why women show no difference in intelligence , although their brains are 8% smaller than men’s .

**
பெண்கள் ஏதாவது ஒரு விசயத்தை செய்தாலோ, சொன்னாலோ அதில் ஒரு தீர்க்கதரிசனம் இருக்கும். இதை வைத்துதான்பெண் புத்தி பின் புத்தி' என்ற பழமொழியே வந்தது. பின்னால் வரக்கூடியதை முன்னதாகவே கணித்து முடிவெடுத்து செய்வார்கள். அந்த அளவிற்கு திறமை படைத்தவர்கள்.

**
இதை நிரூபிக்கும் வகையில் இப்போது ஒரு ஆய்வு முடிவு வந்துள்ளது. ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை சிறிதாக இருந்தாலும், அதற்கு திறன் அதிகமாக உள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

**
தூண்டுதல் பகுத்தறிவு, எண் திறன், நிலைமையை வேகமாக மாற்றி விடக்கூடிய திறன் ஆகியவற்றில் ஆண்களை விட பெண்கள் சிறப்பாக விளங்கினர்.

**
பெண்களின் மூளை, சிக்கலான விஷயங்களிலும் மிக குறைந்த செல்களின் சக்தியை மட்டுமே பயன்படுத்தி தீர்வு காணும் திறன் படைத்துள்ளது. எனினும், புலம்சார்ந்த நுண்ணறிவில் ஆண்கள் சிறப்பாக விளங்கியது ஆய்வில் தெரியவந்தது.

**
திறமைக்கும் மூளையின் அளவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்று இந்த ஆய்வு குறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் அறிவியல் துறை பேராசிரியர் டிரிவோர் ராபின்ஸ் கூறியுள்ளார். 

**
இனிமேலாவது பெண்கள் புத்திசாலிகள் என்று ஆண்கள் சமுதாயம் ஒத்துக்கொள்வார்களா? ;) :) :)

No comments:

Post a Comment