Thursday, December 2, 2010

குழந்தைக்கு அப்பா அம்மாவின் கடிதம்

 
நான் நெடில் பார்த்த மிகவும் உருக்கமான கடிதம், ஒரு தை தந்தை தானுடைய மகன்,மகளுக்கு எழுதும் கடிதம்... இந்த கடிதம் ஆங்கிலத்தில் இருந்தது.. நான் அதை இங்கு என்னால் முடிந்த அளவு மொழி பெயர்த்து இங்கு எளுதிருகின்றேன்.
 
கடிதம்  கீழே: 
என்  குழந்தையே,

            நான் முதியவன் ஆன பின், நீ என்னை புரிந்து கொண்டும் கனிவாக இருப்பை என்று நம்புகிறேன்.

நான் தெரியாமல் கண்ணாடியை போட்டு உடைத்து விட்டாலோ , அல்லது ஏதானும் கொட்டி விட்டாலோ, நான் பார்வை குறைவதால் தான் செய்கிறேன்.  நீ என்னை புரிந்து கொண்டு திட்ட மாட்டாய் என்று நினைகிறேன். 

முதியவர்கள் மிகவும் இளகிய மனம் படைத்தவர்கள் அதனால் திட்டும் போதும் கொஞ்சம் கனிவோடு திட்டு.  

என்னுடைய கேட்கும் திறன் குறைத்து விட்டால் என்னால் நீ கூறுவதை கேட்க முடியாது, அப்பொழுது நீ என்னை செவிடன் என்று சொல்ல மாட்டாய் என்று நம்புகிறேன்.   நீ என்ன சொல் வந்தாயோ அதை திரும்ப சொல் இல்லை என்றால் எழுதி தெரியபடுத்து.

என்னை மன்னித்து விடு , எனக்கு வயது ஆகிகொன்டே இருகின்றது.
என்னுடைய  முழங்கால்கள் பலவீனமாகி கொண்டே இருகின்றது,   நான் எழுந்து நிற்பதற்கு நீ பொறுமையாக எனக்கு உதவி செய்வாய் என்று நம்புகிறேன்.  எப்படி நீ குழந்தையாக இருக்கும் பொழுது நான் உனக்கு உதவி செய்தேனோ அப்பாடி நீயும் செய்வாய் என்று.

நான் ஏதானும் சொன்னதையே திரும்ப திரும்ப பழைய ரெகார்ட் போல் பேசி வந்தாலும் , நீ நான் சொல்லுவதை கேட்பை என்றும் என்னை கேலி செய்ய மாட்டாய் என்றும் அல்லது சலிப்படைய மாட்டாய் என்று நம்புகிறேன். 

உனக்கு நியாபகம் இருகின்றதா, குழந்தையாக இருக்கும் பொழுது பலூன் வாங்கி தரும்வரை  நீ அடம் பிடித்து பலூன் வாங்கியது.. ...
என் மேல் இருந்து வரும் ஒரு விதமான நாற்றதிற்கும் என்னை மன்னிக்க வேண்டும்,  என்னை தினமும் குளிக்க சொல்லி வற்புறுத்தாதே ஏனென்றால் என்னுடைய உடம்பு மிகவும் பலவீனமாக இருகின்றது..
 
நான்  ஏதேனும் புலபி கொண்டு இருந்தால் நீ பொறுமையாக இருப்பாய் என்று நம்புகிறேன். இது வயதானவர்கள் செய்யும் செயல். நீயும் வயதானவுடன் அதை தெரிந்து கொள்வாய்.

உன்னால் எண்ணக்க ஒரு ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கி என்னுடன் நட்பை என்று நம்புகிறேன். உனக்கு வேலை அதிகம் என்று தெரியும் இருத்தலும் நான் சொல்லும் கதைகளை உன்னை கேட்குமாறு கேட்டு கொள்கிறேன் அதற்காக எனக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கு.

எப்பொழுது என்னுடைய நேரம் நெருங்குகிறதோ அப்பொழுது நான் படுத்த படுகையாக இருபேன், அப்பொழுது நீ என்னை கனிவோடு என்னை கவனிப்பை என்று நம்புகிறேன்.தெரியாமல் நான் படிக்கையை நனைத்து விட்டால் என்னை மன்னித்துவிடு.


என்னுடிய கட்சி காலத்தில் நீ என்னை மிகவும் கவனமாகவும், அக்கறையோடும்  பார்த்து கொள்வாய் என்று எனக்கு தெரியும் , என்னுடை நேரும் நேருங்கும் பொழுது நான் நீண்ட நாட்கள் உனக்கு தொல்லை தர மாட்டேன். நீ எண்ணக்க என்னுடன் கை கோர்த்து சாவை எதிர் கொள்ளும்  மன தைரியத்தை தருவாய் என்று நம்புகிறேன்.  
 
கவலை படாதே, கடவுளை நான் பார்க்கும் பொழுது அவரிடம் உன்னை நான் ஆசிர்வதிக்க சொல்லுகிறேன்.  என்னென்றால் நீ உனது தை தந்தையை மிகவும் நேசித்தாய் என்று.   நீ எங்களை மிகவும் கனிவோடு கவனித்ததற்கு மிக்க நன்றி..


என்றும் அன்புடன்,
அப்பா, அம்மா




குறிப்பு:      பெற்றோர்களை நேசியுங்கள், அவர்களை கடசிகலத்தில் தனிய விட்டு விடாதிர்கள்....

1 comment: