Wednesday, April 17, 2013

நாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்


இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது..

3
வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.

**
கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன. 

**
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. 

**
இந்துக்களால்சனிபகவான்தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்

**
அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.

**
நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

**.
நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!! உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!! 

**
எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும்

**
நமது முன்னோர்கள் நம்மை விட கில்லாடிகள் !!!! எப்படியா ?? அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல் அலைந்து கொண்டிருகிருகிறோம்.. :)

**A satellite sent by Nasa, while going round the globe, pauses automatically for three seconds when it crosses a particular spot over the Saneeswarar temple (a Hindu temple dedicated for Saturn), in Thirunallar near Tanjore at Tamil nadu, India.

** Nasa has also officially accepted such an effect, sent some of its scientists to the said place and could not find a possible scientific explanation and that they simply returned saying ‘it is a miracle’.

**The story therefore concludes that temple of the lord Saneeswarar has been correctly built at a place by the ancient people knowing that a heavy dose of UV rays are falling on the temple from space on a particular day every 30 months during the day of “sani peyarchi”(Shifting of the position of the planet from one zodiac to the other, called as Saturn transverse). The same UV rays should be responsible of the slowing down of the satellite whenever it crosses that place.

** No explanations from the Scientists. Just accept it
as a miracle . It is not a fiction.

3 comments:

 1. இணையத்தில் கிடக்கும் சில தவறான தகவல்களுள் இதுவும் ஒன்று..


  இந்த செய்தியை நம்பி திருநள்ளாறினை நினைத்து வியக்காதவர் இல்லை..
  ஆனால், இது "திருநள்ளாறு" என்ற புனிதத்தலத்தின் பேரில் அனைவருக்கும் தண்ணி காட்டிய கதை!!


  உண்மை

  இங்கே தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியில் 1 சதவிகிதம் கூட உண்மையாக இருக்க முடியாது!!! இது அறிவியல் விதிகளுக்கு எதிரானது!

  முதலில் செயற்கைக்கோள்கள் ஏன் பூமியை சுற்றுகிறன என்பதை அறிந்து கொள்வோம்..

  பொருண்மை உள்ள அனைத்துப் பொருட்களும் கால வெளியில் ஓர் விசையை உருவாக்குகின்றன. அவ்விசையின் காரணமாக அவை ஒன்றையொன்று ஈர்க்கின்றன. இந்த ஈர்ப்பு விசையே புவியீர்ப்பு விசை (gravitation) என்றழைக்கப்படுகிறது.
  எப்போதும் வலிய பொருள் எளியதைத் தன்னை நோக்கி மிக வேகமாக ஈர்க்கும்..


  வலிய பொருளின் ஈர்ப்பால் இழுபடாமல் இருக்கவே, செயற்கைக்கோள் பூமியைச் சுற்றுகிறது!

  தற்போது அது நடக்க ஏன் சாத்தியம் இல்லைகா என்பதற்கான காரணங்களுக்கு வருவோம்:

  காரணம் #1: செயற்கைக்கோள் சுற்றும் போது அரை நொடி அப்படியே ஸ்தம்பித்து நின்றாலும், அது பூமியை நோக்கி விழத் துவங்கி விடும்.

  காரணம் #2: உலகில் உள்ள 8 கி.மீ/ நொடி வேகத்தில் செல்லும் எந்த பொருளையும் நொடிப்பொழுதில் நிறுத்த முடியாது!

  காரணம் #3: அப்படி விழுந்து மேலெலுப்படுகிறது என்றாலும், 88 மீ மேலே தூக்க
  வேண்டும்... எத்தனை சிறிய செயற்கைக்கோளாக இருந்தாலும், இவ்வளவு உயரத்தை
  நொடிப்பொழுதில் (ஸ்தம்பித்த நிலையில் இருந்து) எட்டுவது எப்படி சாத்தியம்?

  காரணம் #4: செயற்கைக்கோள் ஸ்டம்பித்து இருக்கும் கால அளவுக்குள் 90 கி.மீ தூரம் கடந்திருக்கும்.. இந்த தூரத்தை செயற்கைக்கோள் எவ்வாறு எட்டும்?

  மேலும்...
  ஒரு சக்திமையத்தில் (Energy Source ) இருந்து தான் சக்திகள் விதவிதமாக வரமுடியும்..
  மற்றவையால் தன்னிடம் வரும் சக்தியில் ஒரு பகுதியை திருப்பி விட மட்டுமே முடியும்!!

  சூரிய குடும்பத்தில் உள்ல ஒரே சக்தி மையம் சூரியன்..
  சனி கிரகம் தன்னிடம் வரும் சக்தியில் ஒரு பகுதியைத் திருப்பத் தான் முடியும்..
  அங்கு பட்டு ஒளிரும் வெளிச்சமே நமக்கு கோளாகத் தெரிகிறது!!!

  பிறகு எப்படி கருநீலக் கதிர்கள் (UV Rays)அடர்த்தி மாறும்?

  சிலர் இதற்கு வேறு விதமாக விளக்கம் சொல்கிறனர்.. அதாவது, செயற்கைக்கோள் ஸ்தம்பிப்பபது என்றால், மிண்ணணு சாதனங்களை மட்டுமே குறிக்கும். விசையைக் குறிக்காது என்று..

  அப்படி என்றால், புகைப்பட கருவியும் வேலை செய்து இருக்காது தானே? எப்படி கூகிள் மேப்பில் திருநள்ளாறு படம் இருக்கிறது???

  ReplyDelete
 2. அறிவியலுக்கு புறம்பான மதவாதிகளின் சாமர்தியமன (ஈனத்தனமான) பொய் இது,அரிவியல் குறைவானவர்களே பெரும்பாலும் சிறந்த கடவுள் பக்தர்கள் ,தன் மதத்தின் பெருமையை தக்க வைக்க இவர்கள் எத்தகைய பொய்யையும் அவிழ்த்துவிடுவார்கள் ,இப்படிதான் ஒரு குருப், உலகம் தட்டை என்று இன்னமும் சொல்லி கொண்டிருக்கிறது

  ReplyDelete
 3. எனைவிட சிறப்பாக பதில் பதிவு இட்டிருக்கிறார் முடிந்தால் பதில் சொல்லுங்கள் இங்கே

  http://aatralarasau.blogspot.fr/2013/04/blog-post_18.html

  ReplyDelete