Tuesday, May 4, 2010

Facebook - ஒரு மாயவலை

எனக்கு பொதுவாக கணினியில் விளையாடுவது ரொம்ப பிடிக்கும். அலுவலகத்தில் வெட்டியா இருக்கும் பொழுது நான் Facebook சைட் உபயோகித்தேன். அதில் farmvilla , mafiawars  மற்றும் பல விளையாட்டுகள் இருக்கின்றன. இவை அனைத்தும் ஆபீஸ் இல் வெட்டியாக இருக்கும் பொழுது விளையாடுவேன். நாளாக அக இந்த விளையாட்டுக்கு நான் அடிமை அகுவதை உணர்தேன்.

நான் மட்டும் இல்லை எனது நண்பர்கள் நான் விளையாடுவதை பார்த்து அவர்களும் விளையாட ஆரம்பித்தார்கள். இன்று ஆபீசில் எனது அருகில் இருக்கும் அனைவரும் விளையாடுகிறார்கள். இதில் என் மேல் வேறு குற்றச்சாட்டு என்னால் தான் அனைவரும் இந்த விளையாட்டை விளையாடுகிறார்கள் என்று.

ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் விளையாடி விளையாட்டு, இப்பொழுது இந்த விளையாட்டை விளையாடிய பிறகு தான் மற்ற வேலை என்ற நிலைமைக்கு கொண்டு வந்து விட்டது. இப்பொழுது சனி மற்றும் சண்டே வும் இந்த விளையாட்டு தொடர்கிறது. நான் மட்டும் தான் இப்படி என்று எண்ணி கொண்டு இருந்தால் உலகத்தில் பல பேர் இதற்கு அடிமை ஆகி விட்டார்கள் என்று புள்ளிவிவரங்களோடு தகவல் சொல்கிறது. அந்த புள்ளி விவரங்களில் நானும் ஒருவன். நான் இந்த ப்லோக் யை எழுதுவதால் விளையாட மாட்டேன் என்ற எண்ணம் வேண்டாம். இந்த ப்ளாக் விளையாடிக்கொண்டு  தான் எழுதுகிறேன்.

No comments:

Post a Comment