Thursday, May 27, 2010

மும்பை ரயில் வாழ்கை part -2

இரண்டு நாட்களுக்கு முன்னால் நானும் எனது நண்பனும் ரயில் பயணம் செய்து கொண்டு இருந்தோம். அது வஷி ரயில் என்பதனால் மன்குருத் பிறகு ரயிலில் பயணிகள் சிறிதளவு தான் இருந்தார்கள். நான் எபோழுதும் வஷி ரயிலில் படியில் தான் நின்று கொண்டு செல்வேன். அன்றும் அப்படி தான் சென்று கொண்டுஇருந்தேன். எனக்கு அடுத்த பக்கத்தில் பயணம் செய்து கொண்டு இருத்த ஒருவன் பரிதாபமாக ரயிலில் இருந்து கை தவறி கிழே விழுது விட்டான். அவன் விழுந்த இடம் ஆல் நடமாட்டம் இல்லாத இடமாகும். இருண்டு ஸ்டேஷன் நடுவில் விழுந்துவிட்டான்.

அவன் அங்கு விழுத்த பிறகு அங்கு இருப்பவர்கள் அவன் இப்பொழுது தான் உட்கார்து இருந்ததாகவும் இப்பொழுது தான் அங்கு வந்து நின்றான் என்று கூறினார்கள். பார்பதற்கு நன்றாக , அலுவலகத்தில் வேலை பார்ப்பது போல் இருந்ததாகவும் கூறினார்கள். அவன் நிலைமையை நினைத்தாள் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

கலையில் அலுவலகமா சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வருவான் என்று அவர்கள் வீட்டில் இருந்திருப்பார்கள் ஆனால் அவனுடைய நேரம் அவன் அப்பொழுது தான் அங்கு வந்து நிற்க வேண்டும் , கை தவறி கிழே வில வேண்டும் என்று இருகின்றது.

இந்த நிகழ்வை பார்த்த பிறகு எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது..

No comments:

Post a Comment