Thursday, October 21, 2010

மதிப்பிற்குரிய முரளிதரன் சார் செய்த உதவி

நான் மும்பையில் RBI யில் 2.5 வருடம் முரளிதரன் சாரிடம் பணியாற்றினேன். அப்பொழுதே அவர் எங்களிடம் நன்றாக பழகுவார். எங்களுக்கு அவர் ஒரு சிறந்த தலைவராக விளங்கினர். அவரிடம் நிறைய managerial Skills உண்டு. அவரை பார்த்து நானும் எனது நண்பர்களும் நிறைய கற்றது உண்டு.

நான்  RBI யில் இருந்து மற்ற ப்ராஜெக்ட் சென்றவுடன் அவருடைய பழக்கம் சற்று குறைந்தது. ஒரு 8 மாதங்கள் களித்து அவரை எதயிர்ச்சியாக பேருந்து நிறுத்தத்தில் சந்திதேன். அப்பொழுது அவரிடம் என்னுடைய அண்ணனுக்கு வேலை இல்லாத விஷயத்தை குறி அவரிடம் ஹெல்ப்  கேட்டேன். அவரும் செய்வதாக சொல்லி விட்டு சென்றார். பிறகு நானும் அவரிடம் அதிகமாக எதுவும் கேட்கவில்லை. அண்ணனுக்கு  வேலை இல்லாமல் 1 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டதால் , எனது அம்மா அவரிடம் மீண்டும் கேக்குமாறு கூறினார்கள்.

ஒரு சனிகிழமை மலை அவருக்கு நான் கால் செய்து அவரிடம் எங்களின் நிமையை எடுத்து கூறி உதவி கேட்டேன். அவரும் இந்ததடவை கண்டிப்பாக உதவி செய்வதாக உறுதி அளித்தார். நானும் அவரிடம் அதன் பிறகு கேட்டு கொண்டே இருந்தேன். அவரும் அண்ணனுக்கு 2.5 லட்சத்திற்கு NPCI யில் வேலை வாங்கி தருவதாக  சொன்னார். அவர் சொன்ன சொல் எங்களுக்கு நம்பிகையுடும் அளவுக்கு இருந்தது. பின் ஒரு 2 மாதம் எந்த ஒரு தகவலும் இல்லாமல் இருந்தது. நான் அவரிடம் மீண்டும் மீண்டும் அண்ணனை பற்றி கூறி கொண்டு இருந்தேன். அவரோ நான் கண்டிப்பாக அண்ணனுக்கு வேலை வாங்கி தருகிறேன் என்று கூறினர். பின் ஒரு நாள் கால் செய்து அண்ணனை ரெடியாக இருக்குமாறும் எபொழுது வேண்டுமானாலும் கால் வரலாம் என்று கூறினர் வந்தால் உடனடியாக  hyderabad சென்று சேரவேண்டும் என்று கூறினர். பின்னர் அதுவும் கொஞ்ச நாள் களித்து சென்னையில் வேலை தருவதாகவும் , நவம்பர் மதம் முதல் வாரத்தில் சேரலாம் என்று கூறினர்.

இந்த நிலையில் அண்ணனுக்கு பெண் பார்த்து கொண்டு இருந்தார்கள். பென்விட்டில் அண்ணன் வேலை இல்லாவிட்டாலும் பரவில்லை என்று குறினாலும், எங்களுக்கு அண்ணன் ஒரு வேளையில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து கொண்டு இருந்தோம். அப்பொழுது அண்ணனுக்கு NPCI யில் இருந்து interview. அண்ணன் அதில் தேர்ச்சி பெற்று 20- oct- 2010 யில் hyderabad ஆபீசில் சேர்த்து விட்டான்.

முரளிதரன் சார் செய்த இந்த உதவி நான், எனது அண்ணன் மற்றும் எனது குடும்பத்தில் உள்ள யாரும் மறக்க முடியாது ஆகும். நான் எனது வாழ்கையில் முரளிதரன் சார் ஐ  என்றும் மறக்க முடியாது. நான் அவரிடம் பணியாற்றியதற்காக அவர் என் அண்ணனை பார்க்க குட இல்லாமல் அவருக்கு ஒரு வேலை வாங்கி தந்து இருகின்றார்.  நான் அவருக்கு  இனிப்பு செண்டு குடுக்கும் பொழுதும், அவர் எல்லாம் அண்ணன் படிப்பிற்கு கிடைத்த பரிசு என்றும் , தான் அண்ணனுக்கு ஒரு உந்து சக்தியாக இருந்ததாக கூறினர். அனாலும் முரளிதரன் சார் இல்லை என்றால் நிச்சியமாக இந்த வேலை அண்ணனுக்கு கிடைத்து இருக்காது.

அண்ணனுக்கு வேலை இல்லாததால் நானும் எனது குடும்பமும் மிகவும் வருத்தமாக இருந்தோம். அண்ணனுக்கு வரன் வேறு உறுதியாகும் தருவாயில் இருந்தது. வேலை ஒன்று மட்டும் தான் பிரச்சினையாக இருந்தது. அப்பொழுது எங்களுக்கு கடவுள் மாதிரி வந்து உதவி செய்தார்  முரளிதரன் சார்.

அண்ணனுக்கு பெண் பார்க்கும்  படலம் முடிந்து , இப்பொழுது அடுத்த கட்ட முயற்சிகள் மேற்கொண்டு இருகிறார்கள். திருமணம் feb -14 2011, லில் இருக்கும்.   இந்த இரண்டு சந்தோசங்களுக்கும் காரணம் முரளிதரன் சார்.


குறிப்பு :
நான் நீண்டநாட்களாக ப்ளாக் எழுதாமல் இருந்தேன். முரளிதரன் சார் செய்த உதவியை மறக்க கூடாது என்பதற்காக இந்த ப்ளாக் எழுதினேன்.

No comments:

Post a Comment