KMCH மருத்துவமனை இங்கு தான் நான் உடம்பு முடியாமல் இரண்டு தடவை இங்கு தங்கிருந்தேன். முதல் முறை 18 நாட்களும், இரண்டாம் முறை 7 நாட்களும் தங்கிருந்தேன். நான் தங்கியருந்த இரண்டு முறையும் எனக்கு உடல் நன்றாக தான் இருந்தது. ஆனால் என்னை பரிசோதித்த மருத்துவர் என்ன காரணத்தாலோ , பணம் அல்லது என்னுடைய நோய் காரணமாக இருக்க சொல்லிருக்கலாம்.
முதல் முறை நான் இங்கு இருந்தபொழுது வைத்தியத்திற்கு நங்கள் தான் செலவு செய்தோம். இரண்டாவது முறை எனது அலுவலகத்தில் எனக்கு காப்புரிமை இருந்ததால் எனக்கு செலவு வெறும் 700 ரூபாய். எனது அலுவலகத்தில் எனக்கு செய்த நல்ல காரியங்களில் இதுவும் ஒன்று.
இந்த KMCH மருத்துவமனை எபோழுதும் மிகவும் குட்டமாக தான் இருகின்றது. நான் , எனது அப்பா, அம்மா மருத்துவத்துக்காக கலையில் 8 மணிக்கு அங்கு இருப்போம், அப்படியும் எங்களுக்கு முன்பு பலர் காற்று கொண்டு இருப்பார்கள். வந்து இருப்பவர்கள் எல்லாம் நடுத்தர மக்கள் தான். வெளி மாநிலத்து காரர்களும் அங்கு பார்க்கலாம். அங்கு சுமர் 100 மருத்துவர்கள் இருப்பார்கள். எரிதம் சென்றாலும் அங்கு நமக்கு முன்னாடி ஒரு 5 நபர் இருப்பார்கள். சிகிச்சை நன்றாக் இருக்கும் காரணத்தால் தான் இங்கு மக்கள் ௬ட்டம் அலை மோதுகின்றது.
இங்கு ஒரு மருத்துவரிடம் பார்க்க 150 ரூபாய் வாங்குகிறார்கள். அது தவிர ரத்த பரிசோதனை, CT ஸ்கேன், X -RAY, இன்னும் பல எடுக்க தனி காசு.இங்கு வருபவர்கள் பெரும்பாலும் மற்ற இடங்களில், அதாவது அவரவர் ஊருகளில் பார்த்த பிறகு தான் இங்கு மேல் சிகிச்சைக்க வருகிறார்கள். அப்படி வருபவர்களிடம் முடிந்த அளவு என்ன என்ன பரிசோதனை இருகின்றதோ அதை எல்லாம் எடுக்க சொல்லிவிடுகிறார்கள். அதனால் இங்கு செல்பவகள் குறைந்தது ஒரு 5 ஆயிரம் ரூபாய் ஆவது எடுத்து செல்ல வேண்டும்.
இந்த மருத்துவமனையில் சுமார் ஒரு 600 , 700 படுக்கை வசதி கொண்டது. ஆனால் இங்கு மருதவமனில் சேருவதற்கு அவுளவு சுலபமாக கிடைத்துவிடாது. முதலில் உங்களுக்கு பொது அரை தான் ஒதுகுவர்கள் பிறகு தனி அரை இருக்கும் பொழுது உங்களை அங்கு மாற்றி விடுவார்கள். இங்கு A/C அறைகளும் உண்டு. நான் இரண்டாவது முறை இங்கு A/C தான் தங்கி இருந்தேன். மருத்துவமனையில் தங்கி இருக்கும் நோயாளிகளுக்கு அங்கு அவர்களே சாப்பாடு, டி , காபி தந்து விடுகிறார்கள். இலவசம் இல்லை கடைசியாக உங்களுக்கு பில் தருவார்கள். வெளியில் இருந்து எதையும் உள்ளே நோயாளிகளுக்கு எடுத்து செல் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் கிடையாது. உள்ளிருக்கும் அவர்கள் காடையில் தான் வாங்கி தர வேண்டும் என்ற உயர்த்த நோக்கத்தில் தான் இப்படி ஒரு கண்டிப்பு.
மருத்துவமனயில் ஒரு கான்டீன் உள்ளது. அங்கு உணவு குறை குறும் அளவிற்கு இருக்காது சுமாராக இருக்கும். ஆனால் அதன் வில்லி தான் மிகவும் அதிகமாக இருக்கும். எபொழுது சென்றாலும் மக்கள் ௬ட்டம் நிறைத்து இருக்கும்.
அங்கு மருத்துவமனையில் பணிபுரியும் எல்லோரும் ஓரளவு மரியாதையாக நடந்துகுவர்கள். நமது மக்களும் அவர்களை அமைதியாக இருக்க விடுவதில்லை. மருத்துவரை பார்க்க வரிசையாக செல்லாமல் உள்ளிருக்கும் நபர் வெளியை வரவிடாமல் உள்ளேய்செல்வர்கள். நமது மக்கள் அப்பிடியே வளர்த்துவிட்டார்கள்.
நடுத்தர மக்களுக்கு ஏற்ற மருத்துவமனை, நல்ல சிகிச்சை. தினமும் சுமார் 3000 பேர் இங்கு வந்து செல்கிறார்கள்.
இந்த மருத்துவமனை பற்றி மேலும் தெரிந்து கொள்ள Click Here.
என்னடா இன்னைக்கு இவன் இந்த மருத்துவமனைக்கு இவ்வளவு விளம்பரம் குடுக்குறான் என்று பார்க்குரீர்கலா, இன்று அலுவலகத்தில் வேலை எதுவும் இல்லாத காரணத்தால் இந்த பதிப்பு.
No comments:
Post a Comment