Thursday, November 11, 2010

நல்ல நாள் அதுவுமா ஏன்டா குடிகுறீங்க


   இந்நாட்டின் உண்மையான குடிமக்கள்  யாரும் எந்த ஒரு நிகழ்வும் இல்லாமல் குடிபதில்லை. அதாவது குடிபவர்கள் எல்லாம் எதாவது ஒரு காரணத்தை சொல்லிக்கொண்டு தான் குடிகிரர்கள். இவர்கள் சொல்லும் காரணம் மட்டும் வித்தியாசமாக இருக்கும். உதரணத்திற்கு இன்னைக்கு நான் மிகவும் சந்தோசமாக இருகின்றேன் அதனால் நான் குடிக்குரேன் என்று கூறுவான். என் சந்தோசமாக இருந்தால் எதாவது ஒரு நல்ல காரியம் செய் அத விட்டுட்டு சந்தோசமா இருக்கு குடிக்குரேன் , இல்லனா துக்கமா இருக்கேன் அதனால குடிக்குரேன். வீட்டுல பிரிச்சனை  அதனால குடிக்குரேன், கடன் தொல்ல , காதல் தோல்வி இப்படி பல காரணம்கள் குடிபவர்களுக்கு இருக்கு அதனால் நான் அவர்களை தவறாக நினைப்பது இல்லை.


நாலு நண்பர்கள் ஒன்றாக சேர்த்தல் போதும் உடனே  மச்சான் எங்க டா சரக்கு அடிக்க போலாம். அப்புறம் யாராவது ஒருத்தனுக்கு பிறந்தநாள் வந்த போதும் உடனே மச்சி எப்படா சரக்கு வாங்கி தருவ. ஏன்டா ஒரு சாக்லேட் கேக்கலாம் அல்லது வேற எதாவது கேக்கலாம் அத விட்டுட்டு சரக்கு அடிக்க போலாம்ன எப்படிடா. 

ஒரு பண்டிகை அல்லது வீட்டுல விசேசம் நா முதல ஆளா சென்று நம்ம திருவாளார்  பொது ஜனம், உண்மையான இந்த்திய குடிமகன் முதலில் செய்வது என்னவென்றால் டாஸ்மாக் சென்று குடித்து விட்டு வருவது. குடித்து விட்டு அமைதியா வந்தால் பரவில்லை ஆனால் நமது குடிமகன் அப்படி இல்லை யாரிடமாவது வம்பு பேசுவது அல்லது அவதுறு பேசுவது இப்படி அல்லபரை பண்ணிக்கொண்டு நாடு தெருவில் விழுந்து கிடப்பார்.வீட்டில் வந்திருக்கும் உறவினர்கள் எல்லாம் இவனை சபித்துவிட்டு அல்லது இவனுடைய நிலைமையை கண்டு நொந்து போவர்கள். வீட்டின்  நிம்மதி அங்கு போய்கொண்டு இருக்கும்.

இப்படி குடித்து வீட்டு சுய நினைவே இல்ல்லாமல் எதற்கு குடிக்க வேண்டும். எதாவது நினைப்பு இருந்தால் பரவில்லை, குடித்து விட்டு வந்தி எடுப்பது, நாலு நாள் தலை வலிக்குது நு உட்கார்து இருக்குறது இது எல்லாம் தேவையாடா. குடிக்கும் பொது சிலர் இருக்கனுங்க குடிச்சதுகு அப்புறம் தான் அவங்களுக்கு அவனோட குடும்பத்து மேல்ல பாசம் வரும். பொண்டாட்டி தாலிய வித்து தண்ணி அடிச்சுஇருப்பான் ஆனா குடிச்சுட்டு புலம்புவான் நான் பாவி தாலிய வச்சி குடிசுடேன்ன்னு.  இதுல வேற பேசுவானுங்க நாங்க எல்லாம் இல்லாட்டி இந்தியா வோட பொருளாதரமே படுதுரும்னு. நீ குடிக்கமா வேலைய பாருடா தன்னால இந்தியாஓட பொருளாதாரம் வளர்ந்துடும்.




குடிச்குரதுனால உடம்பு கேட்டு போகுமடா நு சொன்ன எவன் கேட்குறான். டை மச்சி எப்பவாவது குடிச்ச ஒன்னும் ப்ரோப்லேம் இல்லைடா டெய்லி குடிச்ச தான் டா ப்ரோப்லேம் நு சொல்லுறன். இதுல சிலர் இருக்கனுங்க wine குடிச்ச வெள்ளை ஆகிடுவேன்னு  சொல்லிக்கிட்டு குடிச்குரன்னுங்க இவனுங்களா எல்லாம் எப்படி திருத்துவதுனு தெரியல்ல.



எனக்கு பிடக்காத ஒரு பழக்கம் தண்ணி அடிப்பது. எவ்வளவு நெருங்கிய நண்பனா இருந்தாலும் அவன் தண்ணி அடிக்கும் பொழுது எனக்கு எதிரி, அவன் அப்பொழுது உயிருக்கு போராடி கொண்டு இருந்தாலும் உதவி செய்ய மாட்டேன். அது என்னானு தெரியாது எவனாவது குடிக்குறதா பார்த்தாலோ அல்லது குடிச்சுட்டு பக்கதுல வந்தா எனக்கு கோவம் வந்துவிடுகிறது. அது ஏன் என்று தெரியவில்லை.

குறிப்பு :
அப்பாடி பொழுதுபோகல , அதனால சும்மா எதாவது எழுதனும்னு இந்த ப்ளாக் எழுதி இருக்கேன். சும்மா ஒரு attendence அவ்வளவு தான். ப்ளாக் எண்ணிக்கைய அதிகரிக்க இந்த மாதிரி ஒரு ப்ளாக்.

No comments:

Post a Comment