Tuesday, October 26, 2010

மறக்க முடியாத தருணங்கள் - part4

எனது வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்கு சென்ற இடம் தான் SET காலேஜ். வாழ்க்கையை மிகவும் சந்தோசமாக(நல்ல விதமாக) அனுபவித்த இடம். கல்லூரிக்கு செல்லாமல் விடுதியில் படுத்து உறங்கி கொண்டும், படம் பார்த்து கொண்டும், கிரிக்கெட் விளையாடி கொண்டும் இருந்தோம். முதல் ஆண்டு நான் சேரும் பொழுது எங்கள் விடுதியில் நங்கள் மட்டும் தான், எங்கள் seniors எல்லாம் வேறுஒரு விடுதியில் தங்கி இருந்தார்கள். அதனால் நாங்க எல்லாம் மிகவும் சுதந்திரமாக இருந்தோம்.

நான் மற்றும் எங்களுது நண்பர்கள் சுமார் ஒரு 20 பேர் ஒன்றாக இருப்போம். மற்றும்  எங்களுடன்  படிக்கும் மாணவர்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் தான் இருப்போம். எதாவது ஒரு சின்ன பரிசினை என்றாலும் எல்லோரும் ஒன்றாக தான் இருப்போம். நான் எனது ரூம் மேட் அரவிந்த், ராஜேஷ் எங்கள் ரூம் கதவை உடைத்து விட்டு விடுதி காப்பாளரிடம் இனிமேல் இப்படி கதவை உடைக்க மாட்டோம் என்று எழுதி கொடுத்தது எல்லாம் நன்றாக நினைவிருக்கிறது.

நான் முதல் ஆண்டு படிக்கும் பொழுது ஒரு மாதிரி தேர்வுவை எழுதாமல் ஆளவந்தான் , ஷாஜகான் , தவசி, மற்றும் நந்தா அகிய படங்களை தேர்வு எழுதாமல் சென்று பார்த்து வந்தேன். அப்படி முதல் ஆண்டு மட்டும் நான் பார்த்த படங்கள் 52. அந்த டிக்கெட்கள் எல்லாம் சேர்த்து வைத்து இருந்தேன்.

பரிச்சைக்கு முதல் நாள் தான் நங்கள் படிப்போம். அப்பொழுது மனோஜ் பாபு, தீபக், மொபி இவர்கள் தான் எங்களுக்கு சொல்லி குடுப்பார்கள். அதிலும் மனோஜ் பாபு நங்கள் அவரிடம் இரவு 2 மணிக்கு மேல் தான் சொல்லிகுடுக்க கேட்போம். அவரும் தூஇக    கழகத்தில் சொல்லிகுடுபார். அப்படி படித்து தான் நான்கு வருடங்களையும் முடித்தேன்.

படிக்கும் காலத்தில் மற்ற பசங்க தண்ணி அடிப்பார்கள். அப்படி அடித்தால் அன்று இரவு யாரையும் துங்க விட மாட்டார்கள். ஆனால் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கு. எனக்கு யார் தண்ணி அடித்துவிட்டு பக்கத்தில் வந்தாலும் எனக்கு பிடிக்காது, அடித்து விடுவேன். இதனால் என்னை மட்டும் யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். 

கல்லுரி நாட்களில் மறக்க முடியாத சில சம்பவங்கள் :

1. நண்பன் நாகுவின் மரணம்,  தீபாவளி அன்று வீட்டில் உணவு உண்டு கொண்டு இருந்தேன் அப்பொழுது தான் இந்த செய்தி வந்தது. அதை கேட்டு மனம் மிகவும் கஷ்டமாக இருந்தது.  இன்றும் கல்லுரி வாழ்கை என்றால் அவன் மரணம் எனக்கு முதலில் நாபகம் வரும்.

2. முதல் ஆண்டு படிக்கும் பொழுது விடுதியில் எங்களுடன் தங்கி இருந்த சீனியர் மாணவர்களை அடிக்க போனது. ஆனால் அடிக்க வில்லை.

3. நான்காம் ஆண்டு படிக்கும் பொழுது நடந்த சம்பவம். ஜூனியர் மாணவனுக்கு உதவி செய்வதற்காக முன்றாம் ஆண்டு மாணவனை அடிக்க சென்றது. நங்கள் ஒரு 10 நபர் அவர்கள் ஒரு 20 பேர், அவர்களை அடித்து துவைத்து எடுத்தது. நங்கள் எல்லோரும் சீனியர் என்றதனால் அவர்கள் அனைவரும் எங்களை அடிக்க வில்லை. ஆனால் அவர்கள் ஆண்டு படிக்கும் மாணவர்கள் எல்லோரும் ஒன்றாக குடிவிட்டர்கள். நாங்களும் எங்கள் நாங்கம் ஆண்டு மாணவர்கள் ஒன்றாக சேர்த்து சண்டைக்கு தயாராக இருந்தோம். நல்ல வேலை பிரின்சிபால் வந்ததால் அன்று நடக்க இருந்த மிக பெரிய சண்டை நடக்காமல் இருந்தது.  பிறகு அடுத்த நாள் அவர்களை அடிக்க அணைத்து மாணவர்களும் செல்லும்பொழுது கௌஷிக் பொலிசில் மாட்டிகொண்டான். நங்கள் மாட்டி கொள்ளாமல் இருக்க கட்டுக்குள் சென்று புதர் மறைவில் இருந்தது, பிறகு காலேஜ் பதுங்கி பதுங்கி சென்று attendence கொடுத்தது.

இன்னும் பல நினைவுகள் இருந்கின்ன்றன.  சேகர், கிஷோர், நான், ela , சுந்தர் மற்றும் நடராஜ் , பாபு  ஆகியோர் ஜூனியர் மாணவர்களை அடித்தது இப்படி நிறைய நிகழ்வுகள் இருக்கின்றன.

இப்படி கல்லுரி வாழ்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவங்கள் நிறைய உண்டு , அதை அனைத்தும் எழுத முடியாததால், இது ஒரு சிறிய குறிப்பு.

1 comment:

  1. machi...i don't know how to take my feelings!!!! simply i'm saying my heart beat is increasing da... i remember all our evergreen days da.. keep writing da... i love ur (sorry our) memories... I would like to go to SET once again with all our guys.. Lets see in future..

    Bye Sekara

    ReplyDelete