மறக்க முடியாத தருணங்கள் - part 3....
நான் கரூர் M.H.S.S பள்ளியில் படித்தேன். அது அரசு பள்ளி என்பதால் கண்டிக்க யாரும் இல்லை. நானும் மிக சந்தோசமாக இருந்தேன். +1,+2 திருசெங்கோடு V.V.H.S.S பள்ளியில் விடுதியில் கொண்டு சேர்த்தார்கள். அந்த நாளே என்னால் மறக்க முடியாது. முதன் முதலாய் அப்பா , அம்மாவை பிரிந்து தனியாக விடுதியில் சேர்ந்தேன். கண்களில் நீரும், உள்ளத்தில் சோகத்தையும் வைத்து கொண்டு விடுதியில் சேர்ந்தேன்.
விடுதி வாழ்கை நன்றாக தான் இருந்தது....... ஆனால் இந்த படிக்கும் நேரம் தான் என்னை மிகவும் வாட்டியது. நான் காலையில் எபோழுதும் 6 மணிக்கு மேல் தான் விழிபேன். அங்கு காலை 5 மணிக்கு எழுதிருக்க சொன்னார்கள்,இரவு 10.30 வரை படிக்கச் வேண்டும், இரண்டுமே என்னால் முடியாது. நிறைய தடவை நான் படிக்கும் பொழுது துங்கி அடி வாங்கி உள்ளேன். நான் படித்த பள்ளியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அது ஒரு நவீன சிறை சாலை. எந்த ஒரு தவறு செய்தாலும் அடி பின்னி எடுத்தார்கள். பாய்ஸ் மற்றும் பெண்கள் பேச கூடாது. பார்க்க கூடாது. இப்படி பல சட்டங்கள்.
இதனை கட்டுபாடுகள் இருந்தாலும் அதை ஏமாற்றி தவறு செய்வதில் ஒரு சுவாரசியம். நானும் விடுதில் இருந்து தப்பித்து ஒரே ஒரு படம் பார்த்தேன்.அந்த படப் பெயர் லிட்டில் ஜான் . நான் முதன் முதலில் விடுதியை விட்டு ஈரோடு சென்று பார்த்த படம் அது தான். நான் சென்று வந்த சில நாட்களில் என் நண்பர்கள் பலர் வெளியில் சென்று மாட்டி கொண்டார்கள். மாட்டிகொண்ட அவர்களின் நிலை மிக மோசமானது. (V.V.H.S.S பள்ளி தனியாக ஒரு ப்ளாக் எழுதுகிறேன். for நண்பன் suganthan )
நான் படிக்கும் பொழுது மதிப்பெண் மிகவும் கம்மியாக வாங்குவேன். என்னுடைய அப்பா, அம்மா கேட்கும் பொழுது அடுத்த பரிட்சியில் நன்றாக படித்து நிறைய மார்க் வாங்குவேன் எண்டு சொல்லுவேன். இன்று வரை அவர்கள அதை மறக்கவில்லை.
ஆனால் நான் சொன்ன மாதிரி நல்ல மதிப்பெண் தான் எடுத்தேன். எனக்கும் என் அத்தை பொண்ணுக்கும் யார் அதிக மார்க் எடுப்பது என்ற போட்டி , நான் தான் கடைசியில் வெற்றி பெற்றேன். ரிசல்ட் வந்த நாமே என்னால் மறக்க முடியாது. எல்லோரும் என் மார்க்கை பரடினர்கள் , ஆனால் என் தாதா மட்டும் இன்னும் ஒருமுறை மார்க் செரி பார்க்க சொன்னார். அவர் சொன்னது போலவே நான் எடுத்தது 919 மதிப்பெண். முதலில் சொன்னது 991. என்னை பற்றி அவருக்கு நன்றாக தெரிந்து உள்ளது.பின்பு கவுன்செல்லிங் முலம் திருச்சி பாரதிதாசன் பல்கலைகலத்தில் சேர்ந்தேன்.
மற்றவை அடுத்த ப்ளோகில் (மறக்க முடியாத தருணங்கள் - part4)
No comments:
Post a Comment