சின்ன வயதில் நான், என் அண்ணன், மாது,பிரபா எல்லோரும் ஒரே பள்ளிக்கு சென்றது, பள்ளி முடிந்து வரும் போது எங்களை அழைத்து வர பண்ணையில் வேலை பார்பவர்கள் வருவார்கள். அவர்களில் யார் எங்களை வீட்டிற்கு முதலில் அழைத்து வருகிறார்கள் என்ற போட்டி இன்னும் மறக்க முடியாது. அது போல குடும்பத்தில் உள்ள எல்லோரும் படம் பார்க்க பரமத்தி சினிமா கொட்டகைக்கு செல்வோம். சின்ன வயதில் அது ஒரு திருவில்லா போல் இருக்கும். வண்டி மாடு கட்டி அனைவரும் செல்வோம். எனக்கு படத்திற்கு செல்வது என்றால் கொஞ்சம் பயம். அதனால் நானும் என்னுடைய பெரியப்பாவும் வீட்டில் சில சமயம் செல்லாமல் இருப்போம்.

சுவற்றில் உள்ள சுண்ணாம்பு சுரண்டி தின்னது, தின்னாமல் இருபதற்காக அதில் எதாவது மிளகாய் அல்லது வேறெதுவோ வைத்தார்கள். சிலைய்டு பென்சிலை திட்று விட்டு தினமும் ஒரு புது பென்சில் கேட்பது, அப்புறம் பள்ளி செல்லும் பொழுது வைற்று வலி என்று பள்ளி செல்லாமல் வீட்டில் இருப்பது போன்ற நினைவுகள் இன்றும் நினைத்தால் சந்தோசமாக இருகின்றது.
மறக்க முடியாத தருணங்கள் என்று ஒரு ப்ளாக் எழுதலாம் என்று தான் எண்ணினேன் ஆனால் நிகழ்வுகள் நிறைய இருப்பதால் மற்றதை அடுத்த ப்ளோகில் எழுகிறேன். (to be continued .............மறக்க முடியாத தருணங்கள் - part 2)
No comments:
Post a Comment