நான் பள்ளியில் படித்த காலத்தில் இருந்து எப்பொழுது விடுமுறை விடுவார்கள் என்று நாள், மணி கணக்கு போட்டு கொண்டு இருப்பேன். விடுதியில் தங்கி படித்த காலத்தில் எபொழுது வீட்டிற்கு வருவோம் என்று கணக்கு போட்டு கொண்டு இருப்பேன்.
படிக்கும் காலத்தில், பள்ளியில் இருந்து தப்பித்து வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்தது. வீட்டிற்கு செல்வதற்கு முதல் நாள் இரவு உறக்கம் வராது. கலையில் நேரமாக எழுந்து எப்பொழுது மதியம் வரும் என்று காத்துகொண்டு இருப்பேன். பள்ளியில்ம் இருந்து எனது வீட்டிற்கு 2 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். பள்ளியில் இருந்து மாதம் ஒரு முறை பள்ளி வாகனத்தில் கரூர் வந்து விடுவார்கள். ஆனால் dayscholar மாணவர்களை விட்டு விட்டு தான் அழைத்து செல்வர்கள். அந்த 1 மணி நேரத்தை வீட்டில் சென்று களிபதற்காக அரசு பேருந்தில் அடித்து பிடித்து வீட்டிற்கு செல்வேன்.
விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி செல்லும் பொழுதும் போகுவதர்கே மனது இருக்காது. பல முறை பாதி வழியில் திரும்பி வந்து இருகின்றேன். நான் கல்லூரியில் படிக்கும் பொழுதும் என்னை கல்லூரில் கேட்பதற்கு ஆல் இல்லாததால் அடிக்கடி வீட்டிற்கு வந்து விடுவேன்.
இப்பொழுது நான் மும்பாயில் வேலை பார்த்து கொண்டு இருகின்றேன். இப்பொழுதும் கரூர் செல்லவதற்கு லீவ் எடுக்க முடிவு செய்து விட்டால் ஊருக்கு செல் கின்ற நாள் வரை எப்பொழுது ஊருக்கு செல்வோம் என்ற நினைப்பு தான் அதிகம் இருகின்றது. இன்னும் ஊருக்கு செல்ல எத்தனை நாட்கள் என்று எண்ணி கொண்டு தான் இருகின்றேன். எவ்வளவு தான் வளர்ந்தாலும் இந்த எண்ணம் மட்டும் மாறவில்லை.
இன்னும் 20 நாட்கள் தான் இருகின்றது. நான் ஊருக்கு செல்வதற்கு. அதனால் தான் இந்த திடீர் ப்ளாக்.
No comments:
Post a Comment