ராஜா என்ற நண்பனோடு விளையாடும் பொது அவன் கிழே விழுந்து பல் உடைந்ததும், அந்த சம்பவத்திற்கு நான்,என் அண்ணன், இருவரும் தான் காரணம் என்று யாருக்கும் இது வரை தெரியாது. மற்றும் விளையாடும் பொது ஒரு வாகனத்தின் கண்ணாடி உடைத்தது அதற்கும் காரணம் நான் தான் என்றும் யாருக்கும் தெரியாது.
திருச்சியில் இருந்த பொது துணி கடை வைத்து இருந்தோம் , அப்பொழுது அங்கு வருபவர்களிடம் துணி விற்றது, மற்றும் கடைக்கு செல்லும்போது அப்பா , அம்மா, இருவரும் எதாவது bakery யில் வாங்கி தருவார்கள். அங்கு பாகத்து கடை வைத்திருக்கும் பட்டு, என்பவர் இன்னும் எங்களை ஞாபகம் வைத்து இப்பொழுது வந்து பார்த்து விட்டு போனார்கள். சுமார் ஒரு 15 வருடம் கழித்து வந்து பார்த்தார்கள் எனபது ரொம்ப அச்யர்யமாக இருந்தது.
பள்ளியில் படிக்கும் பொது நானும் எனது அண்ணனும் பேச்சு போட்டியில் கலந்து கொண்டோம், நான் மலை பற்றி பேசுவது என்றும் எனது அண்ணன் வள்ளுவர் பற்றி பேச முடிவு செய்து, எல்லாம் படித்து கொண்டு சென்றோம், ஆனால் அங்கு நான் தலைப்பை மாற்றி அங்கு சொதப்பி விட்டேன். நான் திருச்சியில் படித்த காலத்தில் 3 பேரிடம் டியூஷன் படிதேன், அதில் மறக்க முடியாதது ரமா மேடம், அவர்களிடம் தான் ஹிந்தியும் கற்று கொண்டேன். அன்கு கற்று கொண்ட ஹிந்தி தான் இன்று வரை எனக்கு உபயோகமாக இருகின்றது.
திருச்சியில் படிக்கும் பொது தான் எனக்கு நாய்கள் வளர்த்த வேண்டும் என்ற ஆவல் வந்தது, அதற்கு காரணம் எனுடை நண்பன் விஜய், அவன் அப்பொழுது எனிடம் நிறைய நாய் , மற்றும் பல விலங்குகள் அவன் வீட்டில் இருகின்றது என்றும் அது சாகசங்கள் செய்யும் என்றும் பொய் சொல்லி எனது ஆசையை வளர்த்து விட்டான். கொஞ்ச நாள் சென்று தான் அவன் கூறியது எல்லாம் பொய் என்று தெரிந்தது. நெப்போலியன் , சந்துரு , பிரேம் குட்டன், ராம்குமார் , என்று பல நண்பர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்களில் யாருடனும் இப்பொது தொடர்பு இல்லை. நான் திருச்சியில் நான்கு வருடம் படிதேன் , பின்பு கரூர் வந்துவிட்டேன்.(to be continued on மறக்க முடியாத தருணங்கள் - part 3)
No comments:
Post a Comment