இரண்டு நாட்களுக்கு முன்னால் நானும் எனது நண்பனும் ரயில் பயணம் செய்து கொண்டு இருந்தோம். அது வஷி ரயில் என்பதனால் மன்குருத் பிறகு ரயிலில் பயணிகள் சிறிதளவு தான் இருந்தார்கள். நான் எபோழுதும் வஷி ரயிலில் படியில் தான் நின்று கொண்டு செல்வேன். அன்றும் அப்படி தான் சென்று கொண்டுஇருந்தேன். எனக்கு அடுத்த பக்கத்தில் பயணம் செய்து கொண்டு இருத்த ஒருவன் பரிதாபமாக ரயிலில் இருந்து கை தவறி கிழே விழுது விட்டான். அவன் விழுந்த இடம் ஆல் நடமாட்டம் இல்லாத இடமாகும். இருண்டு ஸ்டேஷன் நடுவில் விழுந்துவிட்டான்.
அவன் அங்கு விழுத்த பிறகு அங்கு இருப்பவர்கள் அவன் இப்பொழுது தான் உட்கார்து இருந்ததாகவும் இப்பொழுது தான் அங்கு வந்து நின்றான் என்று கூறினார்கள். பார்பதற்கு நன்றாக , அலுவலகத்தில் வேலை பார்ப்பது போல் இருந்ததாகவும் கூறினார்கள். அவன் நிலைமையை நினைத்தாள் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
கலையில் அலுவலகமா சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வருவான் என்று அவர்கள் வீட்டில் இருந்திருப்பார்கள் ஆனால் அவனுடைய நேரம் அவன் அப்பொழுது தான் அங்கு வந்து நிற்க வேண்டும் , கை தவறி கிழே வில வேண்டும் என்று இருகின்றது.
இந்த நிகழ்வை பார்த்த பிறகு எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது..
Thursday, May 27, 2010
Friday, May 7, 2010
படித்ததில் பிடித்த கவிதை வரிகள்
இன்று நான் மெயில் செக் பண்ணி கொண்டு இருந்த பொது,என்னுடன் கல்லூரியில் படித்த நண்பன் எனக்கு ஒரு கவிதை அனுப்பி இருந்தான். அந்த கவிதையில் எனக்கு பிடித்த வரிகள்.
அருகில் வரவே
அருகில் வரவே
இனிப்புகள் இலஞ்சமாய்
என் குழந்தைக்கு;
வாங்கவும் மறுக்கிறான்
வரவும் மறுக்கிறான்;
வெடித்துப் போய்
விளக்கம் கேட்டால்;
கத்திச் சொன்னான்
அடிப்பாள் அம்மா
கண்டவரிடம் வாங்கினாள்!
இந்த கவிதை எனக்கு பிடிக்க காரணம் அது சொல்ல வந்த கருத்துக்காக.
Tuesday, May 4, 2010
Facebook - ஒரு மாயவலை
எனக்கு பொதுவாக கணினியில் விளையாடுவது ரொம்ப பிடிக்கும். அலுவலகத்தில் வெட்டியா இருக்கும் பொழுது நான் Facebook சைட் உபயோகித்தேன். அதில் farmvilla , mafiawars மற்றும் பல விளையாட்டுகள் இருக்கின்றன. இவை அனைத்தும் ஆபீஸ் இல் வெட்டியாக இருக்கும் பொழுது விளையாடுவேன். நாளாக அக இந்த விளையாட்டுக்கு நான் அடிமை அகுவதை உணர்தேன்.
ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் விளையாடி விளையாட்டு, இப்பொழுது இந்த விளையாட்டை விளையாடிய பிறகு தான் மற்ற வேலை என்ற நிலைமைக்கு கொண்டு வந்து விட்டது. இப்பொழுது சனி மற்றும் சண்டே வும் இந்த விளையாட்டு தொடர்கிறது. நான் மட்டும் தான் இப்படி என்று எண்ணி கொண்டு இருந்தால் உலகத்தில் பல பேர் இதற்கு அடிமை ஆகி விட்டார்கள் என்று புள்ளிவிவரங்களோடு தகவல் சொல்கிறது. அந்த புள்ளி விவரங்களில் நானும் ஒருவன். நான் இந்த ப்லோக் யை எழுதுவதால் விளையாட மாட்டேன் என்ற எண்ணம் வேண்டாம். இந்த ப்ளாக் விளையாடிக்கொண்டு தான் எழுதுகிறேன்.
Subscribe to:
Comments (Atom)
