நான் பள்ளியில் படித்த காலத்தில் இருந்து எப்பொழுது விடுமுறை விடுவார்கள் என்று நாள், மணி கணக்கு போட்டு கொண்டு இருப்பேன். விடுதியில் தங்கி படித்த காலத்தில் எபொழுது வீட்டிற்கு வருவோம் என்று கணக்கு போட்டு கொண்டு இருப்பேன்.
படிக்கும் காலத்தில், பள்ளியில் இருந்து தப்பித்து வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்தது. வீட்டிற்கு செல்வதற்கு முதல் நாள் இரவு உறக்கம் வராது. கலையில் நேரமாக எழுந்து எப்பொழுது மதியம் வரும் என்று காத்துகொண்டு இருப்பேன். பள்ளியில்ம் இருந்து எனது வீட்டிற்கு 2 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். பள்ளியில் இருந்து மாதம் ஒரு முறை பள்ளி வாகனத்தில் கரூர் வந்து விடுவார்கள். ஆனால் dayscholar மாணவர்களை விட்டு விட்டு தான் அழைத்து செல்வர்கள். அந்த 1 மணி நேரத்தை வீட்டில் சென்று களிபதற்காக அரசு பேருந்தில் அடித்து பிடித்து வீட்டிற்கு செல்வேன்.
விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி செல்லும் பொழுதும் போகுவதர்கே மனது இருக்காது. பல முறை பாதி வழியில் திரும்பி வந்து இருகின்றேன். நான் கல்லூரியில் படிக்கும் பொழுதும் என்னை கல்லூரில் கேட்பதற்கு ஆல் இல்லாததால் அடிக்கடி வீட்டிற்கு வந்து விடுவேன்.
இப்பொழுது நான் மும்பாயில் வேலை பார்த்து கொண்டு இருகின்றேன். இப்பொழுதும் கரூர் செல்லவதற்கு லீவ் எடுக்க முடிவு செய்து விட்டால் ஊருக்கு செல் கின்ற நாள் வரை எப்பொழுது ஊருக்கு செல்வோம் என்ற நினைப்பு தான் அதிகம் இருகின்றது. இன்னும் ஊருக்கு செல்ல எத்தனை நாட்கள் என்று எண்ணி கொண்டு தான் இருகின்றேன். எவ்வளவு தான் வளர்ந்தாலும் இந்த எண்ணம் மட்டும் மாறவில்லை.
இன்னும் 20 நாட்கள் தான் இருகின்றது. நான் ஊருக்கு செல்வதற்கு. அதனால் தான் இந்த திடீர் ப்ளாக்.
Wednesday, March 17, 2010
Thursday, March 11, 2010
நிறைவேறாத pilot கனவு
சிறு வயதில் இருந்து pilot ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. நான் சின்ன வயதில் இருந்து கண்ணாடி அணிந்து வருகின்றேன். நான் 12th முடித்த பிறகு சேரலாம் என்று நினைதேன், ஆனால் பார்வை குறைவால் செல்ல முடியாது என்று நினைத்து செல்லாமல் இருந்து விட்டேன்.ஆனால் நான் கல்லூரியில் படிக்கும் பொழுது தான் கண்பார்வை குறிப்பிட்ட அளவு இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.
கல்லூரியல் படித்து முடித்தவுடன் madras flying club சென்று அப்ப்ளிகாடின் வங்கி பில் பண்ணி கொடுத்தேன். செலவு சுமார் 20 லட்சம் வரும் என்பதால் அந்த முடிவை அப்போதைக்கு விட்டு விட்டேன். வீட்டிலும் என்னால் வற்புறுத்த முடியாத நிலை. இருந்தாலும் நான் சின்ன வயதில் இருந்து pilot ஆக வேண்டும் என்ற கனவை விட முடியவில்லை.
இப்பொழுதும் விமானத்தில் ஏறும் பொழுதும் , பார்க்கும் பொழுதும் என்னுடைய நிறைவேறாத கனவு என்னை வாட்டுகிறது. இப்பொழுது நான் pilot ஆக ட்ரை பணிகொண்டு தான் இருகின்றேன். எதாவது ஒரு aviation அகாடமி பார்த்தல் pilot ஆகுவதற்கு எவளவு ஆகும் என்ற தான் பார்கின்றேன். முதலில் ஏன் பார்வையை சரிசைத்து கொண்டும், pilot ஆகுவதற்கு உண்டான பணத்தை சேர்த்து கொள்ள முயற்சி செய்து கொண்டு இருகின்றேன்.
pilot ஆக வேண்டும் என்ற கனவு நிறைவேறுகிறதா இல்லை அது வெறும் கனவாக மட்டும் இருக்குமா என்று தெரியவில்லை. முடிந்த வரை முயற்சி செய்து கொண்டு தான் இருப்பேன்.

Subscribe to:
Posts (Atom)