Friday, October 26, 2012

ஒரு இனிய அறிவிப்பு!!!!!

நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதும், ப்ளாக்.  இந்த ப்ளோகில் சமிபத்தில் நடந்த நல்ல விஷயங்கள் பற்றி கூறுகிறேன்.

என்னுடைய நீண்ட நாள் கனவு மும்பாயில்  இருந்து பெங்களூர் அல்லது சென்னை மாற்றல் ஆகி வர வேண்டும் என்பது, அந்த ஆசை இப்பொழுது நிறைவேறியது.  கிட்டத்தட்ட ஒரு வருடமாக கேட்டு கொண்டு இருந்த மாற்றல் இந்த ஆகஸ்ட்  மாதம் நிறைவேறியது. பெங்களூரில் ஒரு வீடு அப்பா, அம்மா பிரபாவின் உதவியோடு ஒரு வீடு பார்த்து இருந்தார்கள். நீண்ட நாள் ஆசையான அம்மாவின் சமையலை ஆபீஸ் எடுத்து வந்தேன்.  ஒரு கனவு நிறைவேறியது.  அம்மா பெங்களூரில் இருந்த வரையில் நான் நன்றாக உணவு அருந்தி, diet அக இருந்தேன். அம்மா ஊருக்கு சென்றவுடன் dietகு மிகவும் சிரம பட்டேன்.  10 கிலோ எடை குறைத்தேன், அம்மா சென்றபிறகு உடல் எடை  கூடாமல்  பார்த்து கொண்டு இருகின்றேன்.

நன் பெங்களூர் வரும் வரையில் அப்பா அம்மாவே திருமண பேச்சு எடுக்க வேண்டாம் என்று சொல்லி  இருந்தேன். என்னிடம் சேரி என்று சொல்லிவிட்டு பார்த்து கொண்டு இருந்தார்கள். நான் பெங்களூர் வந்தவுடன் மிகவும் சுறுசுறுப்பாக பார்க்க தொடங்கிவிட்டார்கள். அதன் பலனாக வருங்கின்ற திங்கள் 29-oct-2012, அன்று எனக்கும் , மதுமதிக்கும்   உறுதி வார்த்தை நடக்க இருகின்றது,  நிச்சியதார்த்தம் என்றும் சொல்லலாம்.

பெண் பார்க்க கொடுபதற்காக ஒரு வருடமாக என்னிடம் போட்டோ கேடும் நான் குடுக்கவில்லை. பெங்களூர் வந்த பிறகு சென்டிமென்டாக பேசி நானும் ஒரு போட்டோ எடுத்து கொடுதேன். ஆனால் அந்த போட்டோ  குடுக்கும் முன்பு எனக்கு திருமணம் உறுதி ஆகி விட்டது. 

 மிக விரைவில் நான் எங்களுடைய நிச்யதர்த்த போடோவுடன் கூடிய ஒரு ப்ளாக் எழுதுகிறேன்.


நானும் மதுமதியும் பேச ஆரம்பித்தவுடன் நான் இந்த ப்ளாக் ஷேர் செய்து விட்டேன்.  அது மதுவுக்கு என்னை பற்றி அறிய ஒரு உதவியாக இருந்திருக்கும் என்று நினைகின்றேன்.

No comments:

Post a Comment