மறக்க முடியாத தருணங்கள் - part 3....
நான் கரூர் M.H.S.S பள்ளியில் படித்தேன். அது அரசு பள்ளி என்பதால் கண்டிக்க யாரும் இல்லை. நானும் மிக சந்தோசமாக இருந்தேன். +1,+2 திருசெங்கோடு V.V.H.S.S பள்ளியில் விடுதியில் கொண்டு சேர்த்தார்கள். அந்த நாளே என்னால் மறக்க முடியாது. முதன் முதலாய் அப்பா , அம்மாவை பிரிந்து தனியாக விடுதியில் சேர்ந்தேன். கண்களில் நீரும், உள்ளத்தில் சோகத்தையும் வைத்து கொண்டு விடுதியில் சேர்ந்தேன்.
விடுதி வாழ்கை நன்றாக தான் இருந்தது....... ஆனால் இந்த படிக்கும் நேரம் தான் என்னை மிகவும் வாட்டியது. நான் காலையில் எபோழுதும் 6 மணிக்கு மேல் தான் விழிபேன். அங்கு காலை 5 மணிக்கு எழுதிருக்க சொன்னார்கள்,இரவு 10.30 வரை படிக்கச் வேண்டும், இரண்டுமே என்னால் முடியாது. நிறைய தடவை நான் படிக்கும் பொழுது துங்கி அடி வாங்கி உள்ளேன். நான் படித்த பள்ளியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அது ஒரு நவீன சிறை சாலை. எந்த ஒரு தவறு செய்தாலும் அடி பின்னி எடுத்தார்கள். பாய்ஸ் மற்றும் பெண்கள் பேச கூடாது. பார்க்க கூடாது. இப்படி பல சட்டங்கள்.
இதனை கட்டுபாடுகள் இருந்தாலும் அதை ஏமாற்றி தவறு செய்வதில் ஒரு சுவாரசியம். நானும் விடுதில் இருந்து தப்பித்து ஒரே ஒரு படம் பார்த்தேன்.அந்த படப் பெயர் லிட்டில் ஜான் . நான் முதன் முதலில் விடுதியை விட்டு ஈரோடு சென்று பார்த்த படம் அது தான். நான் சென்று வந்த சில நாட்களில் என் நண்பர்கள் பலர் வெளியில் சென்று மாட்டி கொண்டார்கள். மாட்டிகொண்ட அவர்களின் நிலை மிக மோசமானது. (V.V.H.S.S பள்ளி தனியாக ஒரு ப்ளாக் எழுதுகிறேன். for நண்பன் suganthan )
நான் படிக்கும் பொழுது மதிப்பெண் மிகவும் கம்மியாக வாங்குவேன். என்னுடைய அப்பா, அம்மா கேட்கும் பொழுது அடுத்த பரிட்சியில் நன்றாக படித்து நிறைய மார்க் வாங்குவேன் எண்டு சொல்லுவேன். இன்று வரை அவர்கள அதை மறக்கவில்லை.
ஆனால் நான் சொன்ன மாதிரி நல்ல மதிப்பெண் தான் எடுத்தேன். எனக்கும் என் அத்தை பொண்ணுக்கும் யார் அதிக மார்க் எடுப்பது என்ற போட்டி , நான் தான் கடைசியில் வெற்றி பெற்றேன். ரிசல்ட் வந்த நாமே என்னால் மறக்க முடியாது. எல்லோரும் என் மார்க்கை பரடினர்கள் , ஆனால் என் தாதா மட்டும் இன்னும் ஒருமுறை மார்க் செரி பார்க்க சொன்னார். அவர் சொன்னது போலவே நான் எடுத்தது 919 மதிப்பெண். முதலில் சொன்னது 991. என்னை பற்றி அவருக்கு நன்றாக தெரிந்து உள்ளது.பின்பு கவுன்செல்லிங் முலம் திருச்சி பாரதிதாசன் பல்கலைகலத்தில் சேர்ந்தேன்.
மற்றவை அடுத்த ப்ளோகில் (மறக்க முடியாத தருணங்கள் - part4)
Thursday, April 29, 2010
Wednesday, April 7, 2010
மறக்க முடியாத தருணங்கள் - part 2
என்னுடைய அனுபவங்கள் பாகம் 2 . திருச்சி சின்மயா வித்யாலயாவில் படித்தது, லூர்து சாமீ பிள்ளை தெரு வில் இருந்தது, ராணி , மகேந்திரன், செந்தில்,தேன், பாலாஜி அண்ணன், இவர்களுடன் கிரிக்கெட் விளையாடியது, மற்றும் எனது பிறந்த நாளை நான் கேக் வெட்டி கொண்டாடியது, முதன் முதலில் வீட்டில் டிவி வாங்கியது, அதில் ஒளியும் ஒளியும் சான்றகந்தா, போன்ற நிகழ்ச்சிகள் சண்டே காலையில் அனைவரும் குடும்பத்தோடு உட்கார்து டிவி பார்போம்.
ராஜா என்ற நண்பனோடு விளையாடும் பொது அவன் கிழே விழுந்து பல் உடைந்ததும், அந்த சம்பவத்திற்கு நான்,என் அண்ணன், இருவரும் தான் காரணம் என்று யாருக்கும் இது வரை தெரியாது. மற்றும் விளையாடும் பொது ஒரு வாகனத்தின் கண்ணாடி உடைத்தது அதற்கும் காரணம் நான் தான் என்றும் யாருக்கும் தெரியாது.
திருச்சியில் இருந்த பொது துணி கடை வைத்து இருந்தோம் , அப்பொழுது அங்கு வருபவர்களிடம் துணி விற்றது, மற்றும் கடைக்கு செல்லும்போது அப்பா , அம்மா, இருவரும் எதாவது bakery யில் வாங்கி தருவார்கள். அங்கு பாகத்து கடை வைத்திருக்கும் பட்டு, என்பவர் இன்னும் எங்களை ஞாபகம் வைத்து இப்பொழுது வந்து பார்த்து விட்டு போனார்கள். சுமார் ஒரு 15 வருடம் கழித்து வந்து பார்த்தார்கள் எனபது ரொம்ப அச்யர்யமாக இருந்தது.
பள்ளியில் படிக்கும் பொது நானும் எனது அண்ணனும் பேச்சு போட்டியில் கலந்து கொண்டோம், நான் மலை பற்றி பேசுவது என்றும் எனது அண்ணன் வள்ளுவர் பற்றி பேச முடிவு செய்து, எல்லாம் படித்து கொண்டு சென்றோம், ஆனால் அங்கு நான் தலைப்பை மாற்றி அங்கு சொதப்பி விட்டேன். நான் திருச்சியில் படித்த காலத்தில் 3 பேரிடம் டியூஷன் படிதேன், அதில் மறக்க முடியாதது ரமா மேடம், அவர்களிடம் தான் ஹிந்தியும் கற்று கொண்டேன். அன்கு கற்று கொண்ட ஹிந்தி தான் இன்று வரை எனக்கு உபயோகமாக இருகின்றது.
திருச்சியில் படிக்கும் பொது தான் எனக்கு நாய்கள் வளர்த்த வேண்டும் என்ற ஆவல் வந்தது, அதற்கு காரணம் எனுடை நண்பன் விஜய், அவன் அப்பொழுது எனிடம் நிறைய நாய் , மற்றும் பல விலங்குகள் அவன் வீட்டில் இருகின்றது என்றும் அது சாகசங்கள் செய்யும் என்றும் பொய் சொல்லி எனது ஆசையை வளர்த்து விட்டான். கொஞ்ச நாள் சென்று தான் அவன் கூறியது எல்லாம் பொய் என்று தெரிந்தது. நெப்போலியன் , சந்துரு , பிரேம் குட்டன், ராம்குமார் , என்று பல நண்பர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்களில் யாருடனும் இப்பொது தொடர்பு இல்லை. நான் திருச்சியில் நான்கு வருடம் படிதேன் , பின்பு கரூர் வந்துவிட்டேன்.(to be continued on மறக்க முடியாத தருணங்கள் - part 3)

Monday, April 5, 2010
மறக்க முடியாத தருணங்கள் - part 1
நம் எல்லோர் வாழ்விலும் எதாவது சில மறக்க முடியாத தருணங்களாக இருக்கும். என்னக்கும் சிறு வயது முதல் அப்படி சில நிகவுகள் இருக்கின்றன.அப்பொழுது அவை என் மனதில் பதிந்தவை. இன்னும் என் மனதில் இருகின்றது.
சின்ன வயதில் நான், என் அண்ணன், மாது,பிரபா எல்லோரும் ஒரே பள்ளிக்கு சென்றது, பள்ளி முடிந்து வரும் போது எங்களை அழைத்து வர பண்ணையில் வேலை பார்பவர்கள் வருவார்கள். அவர்களில் யார் எங்களை வீட்டிற்கு முதலில் அழைத்து வருகிறார்கள் என்ற போட்டி இன்னும் மறக்க முடியாது. அது போல குடும்பத்தில் உள்ள எல்லோரும் படம் பார்க்க பரமத்தி சினிமா கொட்டகைக்கு செல்வோம். சின்ன வயதில் அது ஒரு திருவில்லா போல் இருக்கும். வண்டி மாடு கட்டி அனைவரும் செல்வோம். எனக்கு படத்திற்கு செல்வது என்றால் கொஞ்சம் பயம். அதனால் நானும் என்னுடைய பெரியப்பாவும் வீட்டில் சில சமயம் செல்லாமல் இருப்போம்.
சின்ன வயதில் அம்மா அல்லது அப்பா அடித்தார்கள் அல்லது சண்டை போட்டார்கள் என்றால் அப்பா வந்து சமாதனம் செய்வது, இல்லை என்றால் பெரியப்பா சமதானம் செய்வது, சாப்பிடாமல் படுத்தால் பிள்ளையார் கிணற்றில் தண்ணீர் சுமக்க வைத்து விடுவார் என்ற பயமுடுத்துவது, தட்டில் சாப்பாடு ஊரண்டையாக வைத்து அதை காக்கா சாபிட்டது என்று சொல்லி சாப்பாடு சாபிட்டது போன்று பல விஷயங்கள் இன்னும் மனதில் இருக்கின்றன.
சுவற்றில் உள்ள சுண்ணாம்பு சுரண்டி தின்னது, தின்னாமல் இருபதற்காக அதில் எதாவது மிளகாய் அல்லது வேறெதுவோ வைத்தார்கள். சிலைய்டு பென்சிலை திட்று விட்டு தினமும் ஒரு புது பென்சில் கேட்பது, அப்புறம் பள்ளி செல்லும் பொழுது வைற்று வலி என்று பள்ளி செல்லாமல் வீட்டில் இருப்பது போன்ற நினைவுகள் இன்றும் நினைத்தால் சந்தோசமாக இருகின்றது.
மறக்க முடியாத தருணங்கள் என்று ஒரு ப்ளாக் எழுதலாம் என்று தான் எண்ணினேன் ஆனால் நிகழ்வுகள் நிறைய இருப்பதால் மற்றதை அடுத்த ப்ளோகில் எழுகிறேன். (to be continued .............மறக்க முடியாத தருணங்கள் - part 2)

Subscribe to:
Posts (Atom)