Thursday, October 28, 2010

KMCH - மருத்துவமனை.

KMCH மருத்துவமனை இங்கு தான் நான் உடம்பு முடியாமல் இரண்டு தடவை இங்கு தங்கிருந்தேன். முதல் முறை 18 நாட்களும், இரண்டாம் முறை 7 நாட்களும் தங்கிருந்தேன். நான் தங்கியருந்த இரண்டு முறையும் எனக்கு உடல் நன்றாக தான் இருந்தது. ஆனால் என்னை பரிசோதித்த மருத்துவர் என்ன காரணத்தாலோ , பணம் அல்லது என்னுடைய நோய் காரணமாக இருக்க சொல்லிருக்கலாம்.

முதல் முறை நான் இங்கு இருந்தபொழுது வைத்தியத்திற்கு நங்கள் தான் செலவு செய்தோம். இரண்டாவது முறை எனது அலுவலகத்தில் எனக்கு காப்புரிமை இருந்ததால் எனக்கு செலவு வெறும் 700 ரூபாய்.  எனது அலுவலகத்தில் எனக்கு செய்த நல்ல காரியங்களில் இதுவும் ஒன்று.

இந்த KMCH மருத்துவமனை எபோழுதும் மிகவும் குட்டமாக தான் இருகின்றது. நான் , எனது அப்பா, அம்மா மருத்துவத்துக்காக கலையில் 8 மணிக்கு அங்கு இருப்போம், அப்படியும் எங்களுக்கு முன்பு பலர் காற்று கொண்டு இருப்பார்கள். வந்து இருப்பவர்கள் எல்லாம் நடுத்தர மக்கள் தான். வெளி மாநிலத்து காரர்களும் அங்கு பார்க்கலாம். அங்கு சுமர் 100 மருத்துவர்கள் இருப்பார்கள். எரிதம் சென்றாலும் அங்கு நமக்கு முன்னாடி ஒரு 5 நபர் இருப்பார்கள்.  சிகிச்சை நன்றாக்  இருக்கும் காரணத்தால் தான் இங்கு மக்கள் ௬ட்டம் அலை மோதுகின்றது.

இங்கு ஒரு மருத்துவரிடம் பார்க்க 150 ரூபாய் வாங்குகிறார்கள். அது தவிர ரத்த பரிசோதனை, CT ஸ்கேன், X -RAY, இன்னும் பல எடுக்க தனி காசு.இங்கு வருபவர்கள் பெரும்பாலும் மற்ற இடங்களில், அதாவது அவரவர் ஊருகளில் பார்த்த பிறகு தான் இங்கு மேல் சிகிச்சைக்க வருகிறார்கள். அப்படி வருபவர்களிடம் முடிந்த அளவு என்ன என்ன பரிசோதனை இருகின்றதோ அதை எல்லாம் எடுக்க சொல்லிவிடுகிறார்கள்.  அதனால் இங்கு செல்பவகள் குறைந்தது ஒரு 5 ஆயிரம் ரூபாய் ஆவது எடுத்து செல்ல வேண்டும்.

இந்த மருத்துவமனையில் சுமார் ஒரு 600 , 700 படுக்கை வசதி கொண்டது. ஆனால் இங்கு மருதவமனில் சேருவதற்கு அவுளவு சுலபமாக கிடைத்துவிடாது. முதலில் உங்களுக்கு பொது அரை தான் ஒதுகுவர்கள் பிறகு தனி அரை இருக்கும் பொழுது உங்களை அங்கு மாற்றி விடுவார்கள். இங்கு A/C அறைகளும் உண்டு. நான் இரண்டாவது முறை இங்கு A/C தான் தங்கி இருந்தேன்.  மருத்துவமனையில் தங்கி இருக்கும் நோயாளிகளுக்கு அங்கு அவர்களே சாப்பாடு, டி , காபி  தந்து விடுகிறார்கள். இலவசம் இல்லை கடைசியாக உங்களுக்கு பில் தருவார்கள்.  வெளியில் இருந்து எதையும் உள்ளே நோயாளிகளுக்கு எடுத்து செல் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் கிடையாது. உள்ளிருக்கும் அவர்கள் காடையில் தான் வாங்கி தர வேண்டும் என்ற உயர்த்த நோக்கத்தில் தான் இப்படி ஒரு கண்டிப்பு.

மருத்துவமனயில் ஒரு கான்டீன் உள்ளது.  அங்கு உணவு குறை குறும் அளவிற்கு இருக்காது சுமாராக இருக்கும். ஆனால் அதன் வில்லி தான் மிகவும் அதிகமாக இருக்கும். எபொழுது சென்றாலும் மக்கள் ௬ட்டம் நிறைத்து இருக்கும்.

அங்கு மருத்துவமனையில் பணிபுரியும் எல்லோரும் ஓரளவு மரியாதையாக நடந்துகுவர்கள். நமது மக்களும் அவர்களை அமைதியாக இருக்க விடுவதில்லை. மருத்துவரை பார்க்க வரிசையாக செல்லாமல் உள்ளிருக்கும் நபர் வெளியை வரவிடாமல் உள்ளேய்செல்வர்கள். நமது மக்கள் அப்பிடியே வளர்த்துவிட்டார்கள்.

நடுத்தர மக்களுக்கு ஏற்ற மருத்துவமனை, நல்ல சிகிச்சை. தினமும் சுமார் 3000 பேர் இங்கு வந்து செல்கிறார்கள்.

இந்த மருத்துவமனை பற்றி மேலும் தெரிந்து கொள்ள Click Here.

என்னடா இன்னைக்கு இவன் இந்த மருத்துவமனைக்கு இவ்வளவு விளம்பரம் குடுக்குறான் என்று பார்க்குரீர்கலா, இன்று அலுவலகத்தில் வேலை எதுவும் இல்லாத காரணத்தால் இந்த பதிப்பு.

Tuesday, October 26, 2010

மறக்க முடியாத தருணங்கள் - part4

எனது வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்கு சென்ற இடம் தான் SET காலேஜ். வாழ்க்கையை மிகவும் சந்தோசமாக(நல்ல விதமாக) அனுபவித்த இடம். கல்லூரிக்கு செல்லாமல் விடுதியில் படுத்து உறங்கி கொண்டும், படம் பார்த்து கொண்டும், கிரிக்கெட் விளையாடி கொண்டும் இருந்தோம். முதல் ஆண்டு நான் சேரும் பொழுது எங்கள் விடுதியில் நங்கள் மட்டும் தான், எங்கள் seniors எல்லாம் வேறுஒரு விடுதியில் தங்கி இருந்தார்கள். அதனால் நாங்க எல்லாம் மிகவும் சுதந்திரமாக இருந்தோம்.

நான் மற்றும் எங்களுது நண்பர்கள் சுமார் ஒரு 20 பேர் ஒன்றாக இருப்போம். மற்றும்  எங்களுடன்  படிக்கும் மாணவர்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் தான் இருப்போம். எதாவது ஒரு சின்ன பரிசினை என்றாலும் எல்லோரும் ஒன்றாக தான் இருப்போம். நான் எனது ரூம் மேட் அரவிந்த், ராஜேஷ் எங்கள் ரூம் கதவை உடைத்து விட்டு விடுதி காப்பாளரிடம் இனிமேல் இப்படி கதவை உடைக்க மாட்டோம் என்று எழுதி கொடுத்தது எல்லாம் நன்றாக நினைவிருக்கிறது.

நான் முதல் ஆண்டு படிக்கும் பொழுது ஒரு மாதிரி தேர்வுவை எழுதாமல் ஆளவந்தான் , ஷாஜகான் , தவசி, மற்றும் நந்தா அகிய படங்களை தேர்வு எழுதாமல் சென்று பார்த்து வந்தேன். அப்படி முதல் ஆண்டு மட்டும் நான் பார்த்த படங்கள் 52. அந்த டிக்கெட்கள் எல்லாம் சேர்த்து வைத்து இருந்தேன்.

பரிச்சைக்கு முதல் நாள் தான் நங்கள் படிப்போம். அப்பொழுது மனோஜ் பாபு, தீபக், மொபி இவர்கள் தான் எங்களுக்கு சொல்லி குடுப்பார்கள். அதிலும் மனோஜ் பாபு நங்கள் அவரிடம் இரவு 2 மணிக்கு மேல் தான் சொல்லிகுடுக்க கேட்போம். அவரும் தூஇக    கழகத்தில் சொல்லிகுடுபார். அப்படி படித்து தான் நான்கு வருடங்களையும் முடித்தேன்.

படிக்கும் காலத்தில் மற்ற பசங்க தண்ணி அடிப்பார்கள். அப்படி அடித்தால் அன்று இரவு யாரையும் துங்க விட மாட்டார்கள். ஆனால் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கு. எனக்கு யார் தண்ணி அடித்துவிட்டு பக்கத்தில் வந்தாலும் எனக்கு பிடிக்காது, அடித்து விடுவேன். இதனால் என்னை மட்டும் யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். 

கல்லுரி நாட்களில் மறக்க முடியாத சில சம்பவங்கள் :

1. நண்பன் நாகுவின் மரணம்,  தீபாவளி அன்று வீட்டில் உணவு உண்டு கொண்டு இருந்தேன் அப்பொழுது தான் இந்த செய்தி வந்தது. அதை கேட்டு மனம் மிகவும் கஷ்டமாக இருந்தது.  இன்றும் கல்லுரி வாழ்கை என்றால் அவன் மரணம் எனக்கு முதலில் நாபகம் வரும்.

2. முதல் ஆண்டு படிக்கும் பொழுது விடுதியில் எங்களுடன் தங்கி இருந்த சீனியர் மாணவர்களை அடிக்க போனது. ஆனால் அடிக்க வில்லை.

3. நான்காம் ஆண்டு படிக்கும் பொழுது நடந்த சம்பவம். ஜூனியர் மாணவனுக்கு உதவி செய்வதற்காக முன்றாம் ஆண்டு மாணவனை அடிக்க சென்றது. நங்கள் ஒரு 10 நபர் அவர்கள் ஒரு 20 பேர், அவர்களை அடித்து துவைத்து எடுத்தது. நங்கள் எல்லோரும் சீனியர் என்றதனால் அவர்கள் அனைவரும் எங்களை அடிக்க வில்லை. ஆனால் அவர்கள் ஆண்டு படிக்கும் மாணவர்கள் எல்லோரும் ஒன்றாக குடிவிட்டர்கள். நாங்களும் எங்கள் நாங்கம் ஆண்டு மாணவர்கள் ஒன்றாக சேர்த்து சண்டைக்கு தயாராக இருந்தோம். நல்ல வேலை பிரின்சிபால் வந்ததால் அன்று நடக்க இருந்த மிக பெரிய சண்டை நடக்காமல் இருந்தது.  பிறகு அடுத்த நாள் அவர்களை அடிக்க அணைத்து மாணவர்களும் செல்லும்பொழுது கௌஷிக் பொலிசில் மாட்டிகொண்டான். நங்கள் மாட்டி கொள்ளாமல் இருக்க கட்டுக்குள் சென்று புதர் மறைவில் இருந்தது, பிறகு காலேஜ் பதுங்கி பதுங்கி சென்று attendence கொடுத்தது.

இன்னும் பல நினைவுகள் இருந்கின்ன்றன.  சேகர், கிஷோர், நான், ela , சுந்தர் மற்றும் நடராஜ் , பாபு  ஆகியோர் ஜூனியர் மாணவர்களை அடித்தது இப்படி நிறைய நிகழ்வுகள் இருக்கின்றன.

இப்படி கல்லுரி வாழ்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவங்கள் நிறைய உண்டு , அதை அனைத்தும் எழுத முடியாததால், இது ஒரு சிறிய குறிப்பு.

Thursday, October 21, 2010

மதிப்பிற்குரிய முரளிதரன் சார் செய்த உதவி

நான் மும்பையில் RBI யில் 2.5 வருடம் முரளிதரன் சாரிடம் பணியாற்றினேன். அப்பொழுதே அவர் எங்களிடம் நன்றாக பழகுவார். எங்களுக்கு அவர் ஒரு சிறந்த தலைவராக விளங்கினர். அவரிடம் நிறைய managerial Skills உண்டு. அவரை பார்த்து நானும் எனது நண்பர்களும் நிறைய கற்றது உண்டு.

நான்  RBI யில் இருந்து மற்ற ப்ராஜெக்ட் சென்றவுடன் அவருடைய பழக்கம் சற்று குறைந்தது. ஒரு 8 மாதங்கள் களித்து அவரை எதயிர்ச்சியாக பேருந்து நிறுத்தத்தில் சந்திதேன். அப்பொழுது அவரிடம் என்னுடைய அண்ணனுக்கு வேலை இல்லாத விஷயத்தை குறி அவரிடம் ஹெல்ப்  கேட்டேன். அவரும் செய்வதாக சொல்லி விட்டு சென்றார். பிறகு நானும் அவரிடம் அதிகமாக எதுவும் கேட்கவில்லை. அண்ணனுக்கு  வேலை இல்லாமல் 1 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டதால் , எனது அம்மா அவரிடம் மீண்டும் கேக்குமாறு கூறினார்கள்.

ஒரு சனிகிழமை மலை அவருக்கு நான் கால் செய்து அவரிடம் எங்களின் நிமையை எடுத்து கூறி உதவி கேட்டேன். அவரும் இந்ததடவை கண்டிப்பாக உதவி செய்வதாக உறுதி அளித்தார். நானும் அவரிடம் அதன் பிறகு கேட்டு கொண்டே இருந்தேன். அவரும் அண்ணனுக்கு 2.5 லட்சத்திற்கு NPCI யில் வேலை வாங்கி தருவதாக  சொன்னார். அவர் சொன்ன சொல் எங்களுக்கு நம்பிகையுடும் அளவுக்கு இருந்தது. பின் ஒரு 2 மாதம் எந்த ஒரு தகவலும் இல்லாமல் இருந்தது. நான் அவரிடம் மீண்டும் மீண்டும் அண்ணனை பற்றி கூறி கொண்டு இருந்தேன். அவரோ நான் கண்டிப்பாக அண்ணனுக்கு வேலை வாங்கி தருகிறேன் என்று கூறினர். பின் ஒரு நாள் கால் செய்து அண்ணனை ரெடியாக இருக்குமாறும் எபொழுது வேண்டுமானாலும் கால் வரலாம் என்று கூறினர் வந்தால் உடனடியாக  hyderabad சென்று சேரவேண்டும் என்று கூறினர். பின்னர் அதுவும் கொஞ்ச நாள் களித்து சென்னையில் வேலை தருவதாகவும் , நவம்பர் மதம் முதல் வாரத்தில் சேரலாம் என்று கூறினர்.

இந்த நிலையில் அண்ணனுக்கு பெண் பார்த்து கொண்டு இருந்தார்கள். பென்விட்டில் அண்ணன் வேலை இல்லாவிட்டாலும் பரவில்லை என்று குறினாலும், எங்களுக்கு அண்ணன் ஒரு வேளையில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து கொண்டு இருந்தோம். அப்பொழுது அண்ணனுக்கு NPCI யில் இருந்து interview. அண்ணன் அதில் தேர்ச்சி பெற்று 20- oct- 2010 யில் hyderabad ஆபீசில் சேர்த்து விட்டான்.

முரளிதரன் சார் செய்த இந்த உதவி நான், எனது அண்ணன் மற்றும் எனது குடும்பத்தில் உள்ள யாரும் மறக்க முடியாது ஆகும். நான் எனது வாழ்கையில் முரளிதரன் சார் ஐ  என்றும் மறக்க முடியாது. நான் அவரிடம் பணியாற்றியதற்காக அவர் என் அண்ணனை பார்க்க குட இல்லாமல் அவருக்கு ஒரு வேலை வாங்கி தந்து இருகின்றார்.  நான் அவருக்கு  இனிப்பு செண்டு குடுக்கும் பொழுதும், அவர் எல்லாம் அண்ணன் படிப்பிற்கு கிடைத்த பரிசு என்றும் , தான் அண்ணனுக்கு ஒரு உந்து சக்தியாக இருந்ததாக கூறினர். அனாலும் முரளிதரன் சார் இல்லை என்றால் நிச்சியமாக இந்த வேலை அண்ணனுக்கு கிடைத்து இருக்காது.

அண்ணனுக்கு வேலை இல்லாததால் நானும் எனது குடும்பமும் மிகவும் வருத்தமாக இருந்தோம். அண்ணனுக்கு வரன் வேறு உறுதியாகும் தருவாயில் இருந்தது. வேலை ஒன்று மட்டும் தான் பிரச்சினையாக இருந்தது. அப்பொழுது எங்களுக்கு கடவுள் மாதிரி வந்து உதவி செய்தார்  முரளிதரன் சார்.

அண்ணனுக்கு பெண் பார்க்கும்  படலம் முடிந்து , இப்பொழுது அடுத்த கட்ட முயற்சிகள் மேற்கொண்டு இருகிறார்கள். திருமணம் feb -14 2011, லில் இருக்கும்.   இந்த இரண்டு சந்தோசங்களுக்கும் காரணம் முரளிதரன் சார்.


குறிப்பு :
நான் நீண்டநாட்களாக ப்ளாக் எழுதாமல் இருந்தேன். முரளிதரன் சார் செய்த உதவியை மறக்க கூடாது என்பதற்காக இந்த ப்ளாக் எழுதினேன்.