எனக்கு இமெயிலில் வந்த சுவாரசியமான கதை.....
ஒரு பள்ளியில் ஆசிரியை மாணவர்களிடம் கடவுளுக்கு நீங்கள் யாரை போல வர வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதுமாறு கூறுகிறார். அனைத்து மாணவர்களும் அவர்கள் என்னவாக ஆக விரும்புகிறார்களோ அதை கடவுளுக்கு ஒரு கடிதமாக எழுதி கொடுத்தார்கள்.
ஆசிரியை அதை எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்று படித்து பார்த்தார். ஒருவன் டாக்டர், பொறியாளர், ஆசிரியர் என்று பலவாறு எழுதி இருந்தார்கள். ஒரு மாணவனின் கடிதத்தை எடுத்து பார்த்து விட்டு கண்ணிற் விட்டு அழ தொடங்கிவிட்டார். அந்த நேரம் பார்த்து அவள் கணவன் அங்கு வர , அவனிடம் அந்த கடிதத்தை கொடுத்து படிக்க சொன்னாள்.

அந்த கடிதத்தில் ஒரு மாணவன் கடவுளிடம், கடவுளே என்னை தொலைகாட்சியாக மாற்றிவிடு, இன்றிலுருந்து நான் அதனுடைய இடத்தை பிடித்து கொண்டு தொலைகாட்சி போல் வாழ வேண்டும். எனக்கு என்று ஒரு தனி இடம், மேலும் என்னை சுற்றி எனது குடும்பத்தார் உட்கார்து இருப்பார்கள்.
அப்பொழுதுதான் நான் பேசும்பொழுது உன்னிப்பாக கவனிப்பார்கள், நான் தான் எல்லோருடைய கவனத்திலும் இருபேன், மேலும் நான் என்ன சொல்லுகிறேன் , அல்லது என்ன கேட்கின்றேன் என்று கவனிப்பார்கள். மற்றும் எல்லோரும் என்னை தொலைகாட்சியை போல் வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் அக்கறையோடு கவனிப்பார்கள்.

கடவுளே நான் உன்னிடன் ஒன்றே ஒன்று தான் கேட்கின்றேன், எப்படியாவது என்னை தொலைகாட்சியாக மாற்றிவிடு. இப்படி அந்த கடிதில் எழுதி இருந்தது இதை படித்து கொண்டு இருத்த கணவன் மனைவிடம், இந்த பையனின் அப்பா, அம்மா எவ்வளவு மோசமானவர்கள், பிள்ளையிடம் கொஞ்சநேரம் செலவழிக்காமல் இப்படி தொலைகாட்சி பார்த்து கொண்டு இருகிறார்கள் என்று கூறினான். உடனே அவன் மனைவி அவனை பார்த்து இந்த கடிதம் எழுதியது யாரோ ஒரு மாணவன் கிடையாது நமது புதல்வன் தான் என்று கூறினால். கணவன் வாய்யடைத்து போய் நின்றான்.