Thursday, December 23, 2010

CMC இல் இறுதி நாள்

நான் CMC இல் சேர்த்து இன்றோடு 4.8 வருடம் முடிந்து விட்டது.  நான் CMC இல் அப்ப்றேண்டிசே ஆக மதாம் சுமார் RS 5300. சம்பளத்திற்கு சேர்ந்தேன். எனக்கு எல்லாம் கற்று கொடுத்தது CMC தான். எனக்கு என்று ஒரு அந்தஸ்து, மதிப்பு எல்லாம். ஆனால் இன்று நான் இந்த நிருவப்னத்தில் இருந்து பிரிந்து செல்லும் நாள் வந்து விட்டது. நான் இங்கு அனுபவித்த சலுகைகள் பல. வேண்டும் பொது எல்லாம் எனக்கு கணக்கில்லாத விடுமுறை கொடுத்தார்கள். CMC யை விட்டு பிரிவது கொஞ்சம் மனது கஷ்டமாக தான் இருகின்றது... இருந்தாலும் என்னுடைய வருங்காலத்தை கணக்கில் கொண்டு இந்த முடிவு எடுத்து இருகின்றேன். நான் உண்மையான காரணம் இங்கு கூரீருந்தால் கண்டிப்பாக என்னை விட்டு இருக்க மாட்டார்கள்... அதனால் எனக்கு உடம்பு செரி இல்லை என்று ஒரு பொய் காரணத்தை கூறி கொண்டு வெளியில் செல்கின்றேன்.

Thursday, December 2, 2010

குழந்தைக்கு அப்பா அம்மாவின் கடிதம்

 
நான் நெடில் பார்த்த மிகவும் உருக்கமான கடிதம், ஒரு தை தந்தை தானுடைய மகன்,மகளுக்கு எழுதும் கடிதம்... இந்த கடிதம் ஆங்கிலத்தில் இருந்தது.. நான் அதை இங்கு என்னால் முடிந்த அளவு மொழி பெயர்த்து இங்கு எளுதிருகின்றேன்.
 
கடிதம்  கீழே: 
என்  குழந்தையே,

            நான் முதியவன் ஆன பின், நீ என்னை புரிந்து கொண்டும் கனிவாக இருப்பை என்று நம்புகிறேன்.

நான் தெரியாமல் கண்ணாடியை போட்டு உடைத்து விட்டாலோ , அல்லது ஏதானும் கொட்டி விட்டாலோ, நான் பார்வை குறைவதால் தான் செய்கிறேன்.  நீ என்னை புரிந்து கொண்டு திட்ட மாட்டாய் என்று நினைகிறேன். 

முதியவர்கள் மிகவும் இளகிய மனம் படைத்தவர்கள் அதனால் திட்டும் போதும் கொஞ்சம் கனிவோடு திட்டு.  

என்னுடைய கேட்கும் திறன் குறைத்து விட்டால் என்னால் நீ கூறுவதை கேட்க முடியாது, அப்பொழுது நீ என்னை செவிடன் என்று சொல்ல மாட்டாய் என்று நம்புகிறேன்.   நீ என்ன சொல் வந்தாயோ அதை திரும்ப சொல் இல்லை என்றால் எழுதி தெரியபடுத்து.

என்னை மன்னித்து விடு , எனக்கு வயது ஆகிகொன்டே இருகின்றது.
என்னுடைய  முழங்கால்கள் பலவீனமாகி கொண்டே இருகின்றது,   நான் எழுந்து நிற்பதற்கு நீ பொறுமையாக எனக்கு உதவி செய்வாய் என்று நம்புகிறேன்.  எப்படி நீ குழந்தையாக இருக்கும் பொழுது நான் உனக்கு உதவி செய்தேனோ அப்பாடி நீயும் செய்வாய் என்று.

நான் ஏதானும் சொன்னதையே திரும்ப திரும்ப பழைய ரெகார்ட் போல் பேசி வந்தாலும் , நீ நான் சொல்லுவதை கேட்பை என்றும் என்னை கேலி செய்ய மாட்டாய் என்றும் அல்லது சலிப்படைய மாட்டாய் என்று நம்புகிறேன். 

உனக்கு நியாபகம் இருகின்றதா, குழந்தையாக இருக்கும் பொழுது பலூன் வாங்கி தரும்வரை  நீ அடம் பிடித்து பலூன் வாங்கியது.. ...
என் மேல் இருந்து வரும் ஒரு விதமான நாற்றதிற்கும் என்னை மன்னிக்க வேண்டும்,  என்னை தினமும் குளிக்க சொல்லி வற்புறுத்தாதே ஏனென்றால் என்னுடைய உடம்பு மிகவும் பலவீனமாக இருகின்றது..
 
நான்  ஏதேனும் புலபி கொண்டு இருந்தால் நீ பொறுமையாக இருப்பாய் என்று நம்புகிறேன். இது வயதானவர்கள் செய்யும் செயல். நீயும் வயதானவுடன் அதை தெரிந்து கொள்வாய்.

உன்னால் எண்ணக்க ஒரு ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கி என்னுடன் நட்பை என்று நம்புகிறேன். உனக்கு வேலை அதிகம் என்று தெரியும் இருத்தலும் நான் சொல்லும் கதைகளை உன்னை கேட்குமாறு கேட்டு கொள்கிறேன் அதற்காக எனக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கு.

எப்பொழுது என்னுடைய நேரம் நெருங்குகிறதோ அப்பொழுது நான் படுத்த படுகையாக இருபேன், அப்பொழுது நீ என்னை கனிவோடு என்னை கவனிப்பை என்று நம்புகிறேன்.தெரியாமல் நான் படிக்கையை நனைத்து விட்டால் என்னை மன்னித்துவிடு.


என்னுடிய கட்சி காலத்தில் நீ என்னை மிகவும் கவனமாகவும், அக்கறையோடும்  பார்த்து கொள்வாய் என்று எனக்கு தெரியும் , என்னுடை நேரும் நேருங்கும் பொழுது நான் நீண்ட நாட்கள் உனக்கு தொல்லை தர மாட்டேன். நீ எண்ணக்க என்னுடன் கை கோர்த்து சாவை எதிர் கொள்ளும்  மன தைரியத்தை தருவாய் என்று நம்புகிறேன்.  
 
கவலை படாதே, கடவுளை நான் பார்க்கும் பொழுது அவரிடம் உன்னை நான் ஆசிர்வதிக்க சொல்லுகிறேன்.  என்னென்றால் நீ உனது தை தந்தையை மிகவும் நேசித்தாய் என்று.   நீ எங்களை மிகவும் கனிவோடு கவனித்ததற்கு மிக்க நன்றி..


என்றும் அன்புடன்,
அப்பா, அம்மா




குறிப்பு:      பெற்றோர்களை நேசியுங்கள், அவர்களை கடசிகலத்தில் தனிய விட்டு விடாதிர்கள்....

Tuesday, November 23, 2010

தொலைகாட்சியாக மாற வேண்டும் !!


எனக்கு இமெயிலில் வந்த சுவாரசியமான கதை.....

ஒரு பள்ளியில் ஆசிரியை மாணவர்களிடம் கடவுளுக்கு நீங்கள் யாரை போல வர வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதுமாறு கூறுகிறார். அனைத்து மாணவர்களும் அவர்கள் என்னவாக ஆக விரும்புகிறார்களோ அதை கடவுளுக்கு ஒரு கடிதமாக எழுதி கொடுத்தார்கள்.

ஆசிரியை அதை எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்று படித்து பார்த்தார். ஒருவன் டாக்டர், பொறியாளர், ஆசிரியர் என்று பலவாறு எழுதி இருந்தார்கள். ஒரு மாணவனின் கடிதத்தை எடுத்து பார்த்து விட்டு கண்ணிற் விட்டு அழ தொடங்கிவிட்டார்.  அந்த நேரம் பார்த்து அவள் கணவன் அங்கு வர , அவனிடம் அந்த கடிதத்தை கொடுத்து படிக்க சொன்னாள்.

அந்த கடிதத்தில் ஒரு மாணவன்  கடவுளிடம்,  கடவுளே  என்னை தொலைகாட்சியாக  மாற்றிவிடு, இன்றிலுருந்து நான் அதனுடைய இடத்தை பிடித்து கொண்டு தொலைகாட்சி போல் வாழ வேண்டும்.  எனக்கு என்று ஒரு தனி இடம், மேலும் என்னை சுற்றி எனது குடும்பத்தார் உட்கார்து இருப்பார்கள். 

அப்பொழுதுதான் நான் பேசும்பொழுது  உன்னிப்பாக கவனிப்பார்கள், நான் தான் எல்லோருடைய கவனத்திலும் இருபேன், மேலும் நான் என்ன சொல்லுகிறேன் , அல்லது என்ன கேட்கின்றேன் என்று கவனிப்பார்கள். மற்றும் எல்லோரும் என்னை தொலைகாட்சியை போல் வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் அக்கறையோடு கவனிப்பார்கள்.

மேலும் நான் தொலைகாட்சியாக இருந்தால் , என் அப்பா அலுவலகத்தில் இருந்து எவ்வளவு தளர்ச்சியோடு திரும்பி வந்தாலும் என்னோடு சிறிது நேரம் இருப்பார்.  என் அம்மா எவளவு சோகமாக இருந்தாலும் என்னை ஒதுக்காமல் இருப்பார், மேலும் என்னுடைய சகோதரர்கள் என்னுடன் இருப்பதற்கு சண்டை போட்டுகொல்வார்கள். என்னுடைய குடும்பம் எனக்காக சில முக்கிய நிகழ்சிகளை  விட்டுவிட்டு என்னுடன் நேரம் செலவலிபதற்காக வருவார்கள். அப்புறம் நான் கண்டிப்பாக மெகா சீரியல் ஒலிபரப்பு ஆகாத தொலைகாட்சியாக , எனது குடும்பத்தை மகிழ்ச்சியாக வயதிருக்கும் தொலைகாட்சியாக  மாற வேண்டும்.

கடவுளே நான் உன்னிடன் ஒன்றே  ஒன்று தான் கேட்கின்றேன், எப்படியாவது என்னை தொலைகாட்சியாக மாற்றிவிடு. இப்படி அந்த கடிதில் எழுதி இருந்தது  இதை படித்து கொண்டு இருத்த கணவன் மனைவிடம்,  இந்த பையனின் அப்பா, அம்மா எவ்வளவு  மோசமானவர்கள், பிள்ளையிடம் கொஞ்சநேரம் செலவழிக்காமல் இப்படி தொலைகாட்சி பார்த்து கொண்டு இருகிறார்கள் என்று கூறினான். உடனே அவன் மனைவி அவனை பார்த்து இந்த கடிதம் எழுதியது யாரோ ஒரு மாணவன் கிடையாது நமது புதல்வன் தான் என்று கூறினால்.  கணவன் வாய்யடைத்து  போய் நின்றான்.

Monday, November 22, 2010

நிஜமான காதல் கடிதம்!!!!!





நான் நிறைய ப்ளாக் படிப்பது வழக்கம். அப்படி படிக்கும் பொழுது  இந்திராவின் கிறுக்கல்கள்  என்ற ப்ளோகில் இந்த சுவாரஸ்யமான காதல் கடிதத்தை கண்டேன்.


நீங்களும் படித்து பாருங்கள். 

To ,
ANU
UKG A.

Dear ANU,

I love you. My dream I see you. Everywhere you. You no, I live no.
I come red shirt 2morrow. You love I, you come red frock. I wait down
mango tree. You no come, i jump train. Sure come...

yours lovely,
VICKY
Std 1 ப 



மேல் உள்ள காதல் கடிதத்துக்கு வந்துள்ள பதில் கிழே :




Reply....by ANU....

Darling, your letter mama see. Papa beat me beat me so many beat me.
I cry. i cry. So no come to mango tree. No jump train. I love you.
See another day. I no red frock. Only green.

You love me, you love me you green shirt. Give I gift. I see you with pinky.
Where you go.. NO talk to her. Okay My dream also only you

Lovely
ANU...

UKG


காலம்  மாறி விட்டது.  ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை.


Sunday, November 21, 2010

சும்மா ஒரு மொக்க ப்ளாக்

நான் என்னுடைய ப்ளாக்ஜ தூய தமிழ் ப்ளாக் ஆக மேல்ல மேல்ல மாற்ற முயற்சித்து கொண்டு இருகின்றேன்... நான் தமிழில் ப்ளாக் எழுத காரணம் எனக்கு தமிழ் படிக்க தெரியும் ஆனால் பிழை இல்லாமல்  எழுத தெரியாது, படிக்கும் காலங்களில் நான் தமிழில் மட்டும் தான் குறைந்த மதிப்பெண் வாங்குவேன்.(மத்ததுல எல்லாம் 100 /100 வாங்கிட்டியாடானு கேட்க கூடாது.) அதனால தான் தமிழில் ப்ளாக் எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அதன் படி இப்பொழுது தமிழில் எழுதி வருகின்றேன்...


குறிப்பு:  என்னடா மொக்க தனமா ப்ளாக் எளுதுரன்ன்னு நினைக்குறீங்களா
அட நான் வேலையை விட்டுவிட்டேன். இப்பொழுது நோட்டீஸ் பெரயொடில்  இருகின்றேன். அதனால் பொழுது போகாமல் ஆபீஸ் வந்த உடன் இந்த ப்ளாக் எழுதுகிறேன். அடுத்த வேளையில் ஜனவரி மதம் தான் சேருவேன் அது வரை இந்த மாதிரி எதாவது மொக்கைய தான் எழுதுவேன்.

எவ்வளவு தான் எழுதினாலும் ஒரு பக்கம் வர மாட்டிங்குது.....  இன்னும் நல்ல மொக்க போடா ட்ரை பண்ணனும்..

Thursday, November 18, 2010

முதல் வீடியோவுடன் ப்ளாக்...

மத்த ப்ளாக் படிக்கும் பொது எப்படி த ப்ளாக் ல வீடியோ போடுறாங்க அப்படினு யோசிச்சேன் , google ல தேடுனேன் இப்போ இந்த கிரேட் வீடியோ add  பண்ணிட்டேன்.  ஏன்டா முதன் முதல ஒரு வீடியோ ப்ளாக் போடுற அது ஏன்டா இந்த மாதிரி கேவலமான வீடியோ upload பன்றேன்னு  கேட்குரீங்களா, உங்களோட பிஸியான வாழ்க்கையல நம்ம T.R கோவமா  பேசுறத பார்த்து சிரிச்சுட்டு போங்க.



T Rajendar (Next Tamil Nadu CM) vs Ananda Vikatan Part 1

Thursday, November 11, 2010

நல்ல நாள் அதுவுமா ஏன்டா குடிகுறீங்க


   இந்நாட்டின் உண்மையான குடிமக்கள்  யாரும் எந்த ஒரு நிகழ்வும் இல்லாமல் குடிபதில்லை. அதாவது குடிபவர்கள் எல்லாம் எதாவது ஒரு காரணத்தை சொல்லிக்கொண்டு தான் குடிகிரர்கள். இவர்கள் சொல்லும் காரணம் மட்டும் வித்தியாசமாக இருக்கும். உதரணத்திற்கு இன்னைக்கு நான் மிகவும் சந்தோசமாக இருகின்றேன் அதனால் நான் குடிக்குரேன் என்று கூறுவான். என் சந்தோசமாக இருந்தால் எதாவது ஒரு நல்ல காரியம் செய் அத விட்டுட்டு சந்தோசமா இருக்கு குடிக்குரேன் , இல்லனா துக்கமா இருக்கேன் அதனால குடிக்குரேன். வீட்டுல பிரிச்சனை  அதனால குடிக்குரேன், கடன் தொல்ல , காதல் தோல்வி இப்படி பல காரணம்கள் குடிபவர்களுக்கு இருக்கு அதனால் நான் அவர்களை தவறாக நினைப்பது இல்லை.


நாலு நண்பர்கள் ஒன்றாக சேர்த்தல் போதும் உடனே  மச்சான் எங்க டா சரக்கு அடிக்க போலாம். அப்புறம் யாராவது ஒருத்தனுக்கு பிறந்தநாள் வந்த போதும் உடனே மச்சி எப்படா சரக்கு வாங்கி தருவ. ஏன்டா ஒரு சாக்லேட் கேக்கலாம் அல்லது வேற எதாவது கேக்கலாம் அத விட்டுட்டு சரக்கு அடிக்க போலாம்ன எப்படிடா. 

ஒரு பண்டிகை அல்லது வீட்டுல விசேசம் நா முதல ஆளா சென்று நம்ம திருவாளார்  பொது ஜனம், உண்மையான இந்த்திய குடிமகன் முதலில் செய்வது என்னவென்றால் டாஸ்மாக் சென்று குடித்து விட்டு வருவது. குடித்து விட்டு அமைதியா வந்தால் பரவில்லை ஆனால் நமது குடிமகன் அப்படி இல்லை யாரிடமாவது வம்பு பேசுவது அல்லது அவதுறு பேசுவது இப்படி அல்லபரை பண்ணிக்கொண்டு நாடு தெருவில் விழுந்து கிடப்பார்.வீட்டில் வந்திருக்கும் உறவினர்கள் எல்லாம் இவனை சபித்துவிட்டு அல்லது இவனுடைய நிலைமையை கண்டு நொந்து போவர்கள். வீட்டின்  நிம்மதி அங்கு போய்கொண்டு இருக்கும்.

இப்படி குடித்து வீட்டு சுய நினைவே இல்ல்லாமல் எதற்கு குடிக்க வேண்டும். எதாவது நினைப்பு இருந்தால் பரவில்லை, குடித்து விட்டு வந்தி எடுப்பது, நாலு நாள் தலை வலிக்குது நு உட்கார்து இருக்குறது இது எல்லாம் தேவையாடா. குடிக்கும் பொது சிலர் இருக்கனுங்க குடிச்சதுகு அப்புறம் தான் அவங்களுக்கு அவனோட குடும்பத்து மேல்ல பாசம் வரும். பொண்டாட்டி தாலிய வித்து தண்ணி அடிச்சுஇருப்பான் ஆனா குடிச்சுட்டு புலம்புவான் நான் பாவி தாலிய வச்சி குடிசுடேன்ன்னு.  இதுல வேற பேசுவானுங்க நாங்க எல்லாம் இல்லாட்டி இந்தியா வோட பொருளாதரமே படுதுரும்னு. நீ குடிக்கமா வேலைய பாருடா தன்னால இந்தியாஓட பொருளாதாரம் வளர்ந்துடும்.




குடிச்குரதுனால உடம்பு கேட்டு போகுமடா நு சொன்ன எவன் கேட்குறான். டை மச்சி எப்பவாவது குடிச்ச ஒன்னும் ப்ரோப்லேம் இல்லைடா டெய்லி குடிச்ச தான் டா ப்ரோப்லேம் நு சொல்லுறன். இதுல சிலர் இருக்கனுங்க wine குடிச்ச வெள்ளை ஆகிடுவேன்னு  சொல்லிக்கிட்டு குடிச்குரன்னுங்க இவனுங்களா எல்லாம் எப்படி திருத்துவதுனு தெரியல்ல.



எனக்கு பிடக்காத ஒரு பழக்கம் தண்ணி அடிப்பது. எவ்வளவு நெருங்கிய நண்பனா இருந்தாலும் அவன் தண்ணி அடிக்கும் பொழுது எனக்கு எதிரி, அவன் அப்பொழுது உயிருக்கு போராடி கொண்டு இருந்தாலும் உதவி செய்ய மாட்டேன். அது என்னானு தெரியாது எவனாவது குடிக்குறதா பார்த்தாலோ அல்லது குடிச்சுட்டு பக்கதுல வந்தா எனக்கு கோவம் வந்துவிடுகிறது. அது ஏன் என்று தெரியவில்லை.

குறிப்பு :
அப்பாடி பொழுதுபோகல , அதனால சும்மா எதாவது எழுதனும்னு இந்த ப்ளாக் எழுதி இருக்கேன். சும்மா ஒரு attendence அவ்வளவு தான். ப்ளாக் எண்ணிக்கைய அதிகரிக்க இந்த மாதிரி ஒரு ப்ளாக்.

Thursday, October 28, 2010

KMCH - மருத்துவமனை.

KMCH மருத்துவமனை இங்கு தான் நான் உடம்பு முடியாமல் இரண்டு தடவை இங்கு தங்கிருந்தேன். முதல் முறை 18 நாட்களும், இரண்டாம் முறை 7 நாட்களும் தங்கிருந்தேன். நான் தங்கியருந்த இரண்டு முறையும் எனக்கு உடல் நன்றாக தான் இருந்தது. ஆனால் என்னை பரிசோதித்த மருத்துவர் என்ன காரணத்தாலோ , பணம் அல்லது என்னுடைய நோய் காரணமாக இருக்க சொல்லிருக்கலாம்.

முதல் முறை நான் இங்கு இருந்தபொழுது வைத்தியத்திற்கு நங்கள் தான் செலவு செய்தோம். இரண்டாவது முறை எனது அலுவலகத்தில் எனக்கு காப்புரிமை இருந்ததால் எனக்கு செலவு வெறும் 700 ரூபாய்.  எனது அலுவலகத்தில் எனக்கு செய்த நல்ல காரியங்களில் இதுவும் ஒன்று.

இந்த KMCH மருத்துவமனை எபோழுதும் மிகவும் குட்டமாக தான் இருகின்றது. நான் , எனது அப்பா, அம்மா மருத்துவத்துக்காக கலையில் 8 மணிக்கு அங்கு இருப்போம், அப்படியும் எங்களுக்கு முன்பு பலர் காற்று கொண்டு இருப்பார்கள். வந்து இருப்பவர்கள் எல்லாம் நடுத்தர மக்கள் தான். வெளி மாநிலத்து காரர்களும் அங்கு பார்க்கலாம். அங்கு சுமர் 100 மருத்துவர்கள் இருப்பார்கள். எரிதம் சென்றாலும் அங்கு நமக்கு முன்னாடி ஒரு 5 நபர் இருப்பார்கள்.  சிகிச்சை நன்றாக்  இருக்கும் காரணத்தால் தான் இங்கு மக்கள் ௬ட்டம் அலை மோதுகின்றது.

இங்கு ஒரு மருத்துவரிடம் பார்க்க 150 ரூபாய் வாங்குகிறார்கள். அது தவிர ரத்த பரிசோதனை, CT ஸ்கேன், X -RAY, இன்னும் பல எடுக்க தனி காசு.இங்கு வருபவர்கள் பெரும்பாலும் மற்ற இடங்களில், அதாவது அவரவர் ஊருகளில் பார்த்த பிறகு தான் இங்கு மேல் சிகிச்சைக்க வருகிறார்கள். அப்படி வருபவர்களிடம் முடிந்த அளவு என்ன என்ன பரிசோதனை இருகின்றதோ அதை எல்லாம் எடுக்க சொல்லிவிடுகிறார்கள்.  அதனால் இங்கு செல்பவகள் குறைந்தது ஒரு 5 ஆயிரம் ரூபாய் ஆவது எடுத்து செல்ல வேண்டும்.

இந்த மருத்துவமனையில் சுமார் ஒரு 600 , 700 படுக்கை வசதி கொண்டது. ஆனால் இங்கு மருதவமனில் சேருவதற்கு அவுளவு சுலபமாக கிடைத்துவிடாது. முதலில் உங்களுக்கு பொது அரை தான் ஒதுகுவர்கள் பிறகு தனி அரை இருக்கும் பொழுது உங்களை அங்கு மாற்றி விடுவார்கள். இங்கு A/C அறைகளும் உண்டு. நான் இரண்டாவது முறை இங்கு A/C தான் தங்கி இருந்தேன்.  மருத்துவமனையில் தங்கி இருக்கும் நோயாளிகளுக்கு அங்கு அவர்களே சாப்பாடு, டி , காபி  தந்து விடுகிறார்கள். இலவசம் இல்லை கடைசியாக உங்களுக்கு பில் தருவார்கள்.  வெளியில் இருந்து எதையும் உள்ளே நோயாளிகளுக்கு எடுத்து செல் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் கிடையாது. உள்ளிருக்கும் அவர்கள் காடையில் தான் வாங்கி தர வேண்டும் என்ற உயர்த்த நோக்கத்தில் தான் இப்படி ஒரு கண்டிப்பு.

மருத்துவமனயில் ஒரு கான்டீன் உள்ளது.  அங்கு உணவு குறை குறும் அளவிற்கு இருக்காது சுமாராக இருக்கும். ஆனால் அதன் வில்லி தான் மிகவும் அதிகமாக இருக்கும். எபொழுது சென்றாலும் மக்கள் ௬ட்டம் நிறைத்து இருக்கும்.

அங்கு மருத்துவமனையில் பணிபுரியும் எல்லோரும் ஓரளவு மரியாதையாக நடந்துகுவர்கள். நமது மக்களும் அவர்களை அமைதியாக இருக்க விடுவதில்லை. மருத்துவரை பார்க்க வரிசையாக செல்லாமல் உள்ளிருக்கும் நபர் வெளியை வரவிடாமல் உள்ளேய்செல்வர்கள். நமது மக்கள் அப்பிடியே வளர்த்துவிட்டார்கள்.

நடுத்தர மக்களுக்கு ஏற்ற மருத்துவமனை, நல்ல சிகிச்சை. தினமும் சுமார் 3000 பேர் இங்கு வந்து செல்கிறார்கள்.

இந்த மருத்துவமனை பற்றி மேலும் தெரிந்து கொள்ள Click Here.

என்னடா இன்னைக்கு இவன் இந்த மருத்துவமனைக்கு இவ்வளவு விளம்பரம் குடுக்குறான் என்று பார்க்குரீர்கலா, இன்று அலுவலகத்தில் வேலை எதுவும் இல்லாத காரணத்தால் இந்த பதிப்பு.

Tuesday, October 26, 2010

மறக்க முடியாத தருணங்கள் - part4

எனது வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்கு சென்ற இடம் தான் SET காலேஜ். வாழ்க்கையை மிகவும் சந்தோசமாக(நல்ல விதமாக) அனுபவித்த இடம். கல்லூரிக்கு செல்லாமல் விடுதியில் படுத்து உறங்கி கொண்டும், படம் பார்த்து கொண்டும், கிரிக்கெட் விளையாடி கொண்டும் இருந்தோம். முதல் ஆண்டு நான் சேரும் பொழுது எங்கள் விடுதியில் நங்கள் மட்டும் தான், எங்கள் seniors எல்லாம் வேறுஒரு விடுதியில் தங்கி இருந்தார்கள். அதனால் நாங்க எல்லாம் மிகவும் சுதந்திரமாக இருந்தோம்.

நான் மற்றும் எங்களுது நண்பர்கள் சுமார் ஒரு 20 பேர் ஒன்றாக இருப்போம். மற்றும்  எங்களுடன்  படிக்கும் மாணவர்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் தான் இருப்போம். எதாவது ஒரு சின்ன பரிசினை என்றாலும் எல்லோரும் ஒன்றாக தான் இருப்போம். நான் எனது ரூம் மேட் அரவிந்த், ராஜேஷ் எங்கள் ரூம் கதவை உடைத்து விட்டு விடுதி காப்பாளரிடம் இனிமேல் இப்படி கதவை உடைக்க மாட்டோம் என்று எழுதி கொடுத்தது எல்லாம் நன்றாக நினைவிருக்கிறது.

நான் முதல் ஆண்டு படிக்கும் பொழுது ஒரு மாதிரி தேர்வுவை எழுதாமல் ஆளவந்தான் , ஷாஜகான் , தவசி, மற்றும் நந்தா அகிய படங்களை தேர்வு எழுதாமல் சென்று பார்த்து வந்தேன். அப்படி முதல் ஆண்டு மட்டும் நான் பார்த்த படங்கள் 52. அந்த டிக்கெட்கள் எல்லாம் சேர்த்து வைத்து இருந்தேன்.

பரிச்சைக்கு முதல் நாள் தான் நங்கள் படிப்போம். அப்பொழுது மனோஜ் பாபு, தீபக், மொபி இவர்கள் தான் எங்களுக்கு சொல்லி குடுப்பார்கள். அதிலும் மனோஜ் பாபு நங்கள் அவரிடம் இரவு 2 மணிக்கு மேல் தான் சொல்லிகுடுக்க கேட்போம். அவரும் தூஇக    கழகத்தில் சொல்லிகுடுபார். அப்படி படித்து தான் நான்கு வருடங்களையும் முடித்தேன்.

படிக்கும் காலத்தில் மற்ற பசங்க தண்ணி அடிப்பார்கள். அப்படி அடித்தால் அன்று இரவு யாரையும் துங்க விட மாட்டார்கள். ஆனால் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கு. எனக்கு யார் தண்ணி அடித்துவிட்டு பக்கத்தில் வந்தாலும் எனக்கு பிடிக்காது, அடித்து விடுவேன். இதனால் என்னை மட்டும் யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். 

கல்லுரி நாட்களில் மறக்க முடியாத சில சம்பவங்கள் :

1. நண்பன் நாகுவின் மரணம்,  தீபாவளி அன்று வீட்டில் உணவு உண்டு கொண்டு இருந்தேன் அப்பொழுது தான் இந்த செய்தி வந்தது. அதை கேட்டு மனம் மிகவும் கஷ்டமாக இருந்தது.  இன்றும் கல்லுரி வாழ்கை என்றால் அவன் மரணம் எனக்கு முதலில் நாபகம் வரும்.

2. முதல் ஆண்டு படிக்கும் பொழுது விடுதியில் எங்களுடன் தங்கி இருந்த சீனியர் மாணவர்களை அடிக்க போனது. ஆனால் அடிக்க வில்லை.

3. நான்காம் ஆண்டு படிக்கும் பொழுது நடந்த சம்பவம். ஜூனியர் மாணவனுக்கு உதவி செய்வதற்காக முன்றாம் ஆண்டு மாணவனை அடிக்க சென்றது. நங்கள் ஒரு 10 நபர் அவர்கள் ஒரு 20 பேர், அவர்களை அடித்து துவைத்து எடுத்தது. நங்கள் எல்லோரும் சீனியர் என்றதனால் அவர்கள் அனைவரும் எங்களை அடிக்க வில்லை. ஆனால் அவர்கள் ஆண்டு படிக்கும் மாணவர்கள் எல்லோரும் ஒன்றாக குடிவிட்டர்கள். நாங்களும் எங்கள் நாங்கம் ஆண்டு மாணவர்கள் ஒன்றாக சேர்த்து சண்டைக்கு தயாராக இருந்தோம். நல்ல வேலை பிரின்சிபால் வந்ததால் அன்று நடக்க இருந்த மிக பெரிய சண்டை நடக்காமல் இருந்தது.  பிறகு அடுத்த நாள் அவர்களை அடிக்க அணைத்து மாணவர்களும் செல்லும்பொழுது கௌஷிக் பொலிசில் மாட்டிகொண்டான். நங்கள் மாட்டி கொள்ளாமல் இருக்க கட்டுக்குள் சென்று புதர் மறைவில் இருந்தது, பிறகு காலேஜ் பதுங்கி பதுங்கி சென்று attendence கொடுத்தது.

இன்னும் பல நினைவுகள் இருந்கின்ன்றன.  சேகர், கிஷோர், நான், ela , சுந்தர் மற்றும் நடராஜ் , பாபு  ஆகியோர் ஜூனியர் மாணவர்களை அடித்தது இப்படி நிறைய நிகழ்வுகள் இருக்கின்றன.

இப்படி கல்லுரி வாழ்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவங்கள் நிறைய உண்டு , அதை அனைத்தும் எழுத முடியாததால், இது ஒரு சிறிய குறிப்பு.

Thursday, October 21, 2010

மதிப்பிற்குரிய முரளிதரன் சார் செய்த உதவி

நான் மும்பையில் RBI யில் 2.5 வருடம் முரளிதரன் சாரிடம் பணியாற்றினேன். அப்பொழுதே அவர் எங்களிடம் நன்றாக பழகுவார். எங்களுக்கு அவர் ஒரு சிறந்த தலைவராக விளங்கினர். அவரிடம் நிறைய managerial Skills உண்டு. அவரை பார்த்து நானும் எனது நண்பர்களும் நிறைய கற்றது உண்டு.

நான்  RBI யில் இருந்து மற்ற ப்ராஜெக்ட் சென்றவுடன் அவருடைய பழக்கம் சற்று குறைந்தது. ஒரு 8 மாதங்கள் களித்து அவரை எதயிர்ச்சியாக பேருந்து நிறுத்தத்தில் சந்திதேன். அப்பொழுது அவரிடம் என்னுடைய அண்ணனுக்கு வேலை இல்லாத விஷயத்தை குறி அவரிடம் ஹெல்ப்  கேட்டேன். அவரும் செய்வதாக சொல்லி விட்டு சென்றார். பிறகு நானும் அவரிடம் அதிகமாக எதுவும் கேட்கவில்லை. அண்ணனுக்கு  வேலை இல்லாமல் 1 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டதால் , எனது அம்மா அவரிடம் மீண்டும் கேக்குமாறு கூறினார்கள்.

ஒரு சனிகிழமை மலை அவருக்கு நான் கால் செய்து அவரிடம் எங்களின் நிமையை எடுத்து கூறி உதவி கேட்டேன். அவரும் இந்ததடவை கண்டிப்பாக உதவி செய்வதாக உறுதி அளித்தார். நானும் அவரிடம் அதன் பிறகு கேட்டு கொண்டே இருந்தேன். அவரும் அண்ணனுக்கு 2.5 லட்சத்திற்கு NPCI யில் வேலை வாங்கி தருவதாக  சொன்னார். அவர் சொன்ன சொல் எங்களுக்கு நம்பிகையுடும் அளவுக்கு இருந்தது. பின் ஒரு 2 மாதம் எந்த ஒரு தகவலும் இல்லாமல் இருந்தது. நான் அவரிடம் மீண்டும் மீண்டும் அண்ணனை பற்றி கூறி கொண்டு இருந்தேன். அவரோ நான் கண்டிப்பாக அண்ணனுக்கு வேலை வாங்கி தருகிறேன் என்று கூறினர். பின் ஒரு நாள் கால் செய்து அண்ணனை ரெடியாக இருக்குமாறும் எபொழுது வேண்டுமானாலும் கால் வரலாம் என்று கூறினர் வந்தால் உடனடியாக  hyderabad சென்று சேரவேண்டும் என்று கூறினர். பின்னர் அதுவும் கொஞ்ச நாள் களித்து சென்னையில் வேலை தருவதாகவும் , நவம்பர் மதம் முதல் வாரத்தில் சேரலாம் என்று கூறினர்.

இந்த நிலையில் அண்ணனுக்கு பெண் பார்த்து கொண்டு இருந்தார்கள். பென்விட்டில் அண்ணன் வேலை இல்லாவிட்டாலும் பரவில்லை என்று குறினாலும், எங்களுக்கு அண்ணன் ஒரு வேளையில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து கொண்டு இருந்தோம். அப்பொழுது அண்ணனுக்கு NPCI யில் இருந்து interview. அண்ணன் அதில் தேர்ச்சி பெற்று 20- oct- 2010 யில் hyderabad ஆபீசில் சேர்த்து விட்டான்.

முரளிதரன் சார் செய்த இந்த உதவி நான், எனது அண்ணன் மற்றும் எனது குடும்பத்தில் உள்ள யாரும் மறக்க முடியாது ஆகும். நான் எனது வாழ்கையில் முரளிதரன் சார் ஐ  என்றும் மறக்க முடியாது. நான் அவரிடம் பணியாற்றியதற்காக அவர் என் அண்ணனை பார்க்க குட இல்லாமல் அவருக்கு ஒரு வேலை வாங்கி தந்து இருகின்றார்.  நான் அவருக்கு  இனிப்பு செண்டு குடுக்கும் பொழுதும், அவர் எல்லாம் அண்ணன் படிப்பிற்கு கிடைத்த பரிசு என்றும் , தான் அண்ணனுக்கு ஒரு உந்து சக்தியாக இருந்ததாக கூறினர். அனாலும் முரளிதரன் சார் இல்லை என்றால் நிச்சியமாக இந்த வேலை அண்ணனுக்கு கிடைத்து இருக்காது.

அண்ணனுக்கு வேலை இல்லாததால் நானும் எனது குடும்பமும் மிகவும் வருத்தமாக இருந்தோம். அண்ணனுக்கு வரன் வேறு உறுதியாகும் தருவாயில் இருந்தது. வேலை ஒன்று மட்டும் தான் பிரச்சினையாக இருந்தது. அப்பொழுது எங்களுக்கு கடவுள் மாதிரி வந்து உதவி செய்தார்  முரளிதரன் சார்.

அண்ணனுக்கு பெண் பார்க்கும்  படலம் முடிந்து , இப்பொழுது அடுத்த கட்ட முயற்சிகள் மேற்கொண்டு இருகிறார்கள். திருமணம் feb -14 2011, லில் இருக்கும்.   இந்த இரண்டு சந்தோசங்களுக்கும் காரணம் முரளிதரன் சார்.


குறிப்பு :
நான் நீண்டநாட்களாக ப்ளாக் எழுதாமல் இருந்தேன். முரளிதரன் சார் செய்த உதவியை மறக்க கூடாது என்பதற்காக இந்த ப்ளாக் எழுதினேன்.

Thursday, May 27, 2010

மும்பை ரயில் வாழ்கை part -2

இரண்டு நாட்களுக்கு முன்னால் நானும் எனது நண்பனும் ரயில் பயணம் செய்து கொண்டு இருந்தோம். அது வஷி ரயில் என்பதனால் மன்குருத் பிறகு ரயிலில் பயணிகள் சிறிதளவு தான் இருந்தார்கள். நான் எபோழுதும் வஷி ரயிலில் படியில் தான் நின்று கொண்டு செல்வேன். அன்றும் அப்படி தான் சென்று கொண்டுஇருந்தேன். எனக்கு அடுத்த பக்கத்தில் பயணம் செய்து கொண்டு இருத்த ஒருவன் பரிதாபமாக ரயிலில் இருந்து கை தவறி கிழே விழுது விட்டான். அவன் விழுந்த இடம் ஆல் நடமாட்டம் இல்லாத இடமாகும். இருண்டு ஸ்டேஷன் நடுவில் விழுந்துவிட்டான்.

அவன் அங்கு விழுத்த பிறகு அங்கு இருப்பவர்கள் அவன் இப்பொழுது தான் உட்கார்து இருந்ததாகவும் இப்பொழுது தான் அங்கு வந்து நின்றான் என்று கூறினார்கள். பார்பதற்கு நன்றாக , அலுவலகத்தில் வேலை பார்ப்பது போல் இருந்ததாகவும் கூறினார்கள். அவன் நிலைமையை நினைத்தாள் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

கலையில் அலுவலகமா சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வருவான் என்று அவர்கள் வீட்டில் இருந்திருப்பார்கள் ஆனால் அவனுடைய நேரம் அவன் அப்பொழுது தான் அங்கு வந்து நிற்க வேண்டும் , கை தவறி கிழே வில வேண்டும் என்று இருகின்றது.

இந்த நிகழ்வை பார்த்த பிறகு எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது..

Friday, May 7, 2010

படித்ததில் பிடித்த கவிதை வரிகள்

இன்று நான் மெயில் செக் பண்ணி கொண்டு இருந்த பொது,என்னுடன்  கல்லூரியில் படித்த நண்பன் எனக்கு ஒரு கவிதை அனுப்பி இருந்தான். அந்த கவிதையில் எனக்கு பிடித்த வரிகள்.

அருகில் வரவே
இனிப்புகள் இலஞ்சமாய்
என் குழந்தைக்கு;
வாங்கவும் மறுக்கிறான்
வரவும் மறுக்கிறான்;

வெடித்துப் போய்
விளக்கம் கேட்டால்;
கத்திச் சொன்னான்
அடிப்பாள் அம்மா
கண்டவரிடம் வாங்கினாள்!
 
இந்த கவிதை எனக்கு பிடிக்க காரணம் அது சொல்ல வந்த கருத்துக்காக.

Tuesday, May 4, 2010

Facebook - ஒரு மாயவலை

எனக்கு பொதுவாக கணினியில் விளையாடுவது ரொம்ப பிடிக்கும். அலுவலகத்தில் வெட்டியா இருக்கும் பொழுது நான் Facebook சைட் உபயோகித்தேன். அதில் farmvilla , mafiawars  மற்றும் பல விளையாட்டுகள் இருக்கின்றன. இவை அனைத்தும் ஆபீஸ் இல் வெட்டியாக இருக்கும் பொழுது விளையாடுவேன். நாளாக அக இந்த விளையாட்டுக்கு நான் அடிமை அகுவதை உணர்தேன்.

நான் மட்டும் இல்லை எனது நண்பர்கள் நான் விளையாடுவதை பார்த்து அவர்களும் விளையாட ஆரம்பித்தார்கள். இன்று ஆபீசில் எனது அருகில் இருக்கும் அனைவரும் விளையாடுகிறார்கள். இதில் என் மேல் வேறு குற்றச்சாட்டு என்னால் தான் அனைவரும் இந்த விளையாட்டை விளையாடுகிறார்கள் என்று.

ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் விளையாடி விளையாட்டு, இப்பொழுது இந்த விளையாட்டை விளையாடிய பிறகு தான் மற்ற வேலை என்ற நிலைமைக்கு கொண்டு வந்து விட்டது. இப்பொழுது சனி மற்றும் சண்டே வும் இந்த விளையாட்டு தொடர்கிறது. நான் மட்டும் தான் இப்படி என்று எண்ணி கொண்டு இருந்தால் உலகத்தில் பல பேர் இதற்கு அடிமை ஆகி விட்டார்கள் என்று புள்ளிவிவரங்களோடு தகவல் சொல்கிறது. அந்த புள்ளி விவரங்களில் நானும் ஒருவன். நான் இந்த ப்லோக் யை எழுதுவதால் விளையாட மாட்டேன் என்ற எண்ணம் வேண்டாம். இந்த ப்ளாக் விளையாடிக்கொண்டு  தான் எழுதுகிறேன்.

Thursday, April 29, 2010

மறக்க முடியாத தருணங்கள் - part 3

மறக்க முடியாத தருணங்கள் -  part 3....

நான் கரூர் M.H.S.S பள்ளியில் படித்தேன். அது அரசு பள்ளி என்பதால் கண்டிக்க யாரும் இல்லை. நானும் மிக சந்தோசமாக இருந்தேன். +1,+2  திருசெங்கோடு V.V.H.S.S பள்ளியில் விடுதியில்  கொண்டு சேர்த்தார்கள். அந்த நாளே என்னால் மறக்க முடியாது. முதன் முதலாய் அப்பா , அம்மாவை பிரிந்து தனியாக விடுதியில் சேர்ந்தேன். கண்களில் நீரும், உள்ளத்தில் சோகத்தையும் வைத்து கொண்டு விடுதியில் சேர்ந்தேன்.

விடுதி வாழ்கை நன்றாக தான் இருந்தது....... ஆனால் இந்த படிக்கும் நேரம் தான் என்னை மிகவும் வாட்டியது. நான் காலையில் எபோழுதும் 6  மணிக்கு மேல்  தான் விழிபேன். அங்கு காலை 5 மணிக்கு எழுதிருக்க சொன்னார்கள்,இரவு  10.30 வரை படிக்கச் வேண்டும், இரண்டுமே என்னால் முடியாது. நிறைய தடவை நான் படிக்கும் பொழுது துங்கி அடி வாங்கி உள்ளேன். நான் படித்த பள்ளியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அது ஒரு நவீன சிறை சாலை. எந்த ஒரு தவறு செய்தாலும் அடி பின்னி எடுத்தார்கள். பாய்ஸ்  மற்றும் பெண்கள் பேச கூடாது. பார்க்க கூடாது. இப்படி பல சட்டங்கள்.

இதனை கட்டுபாடுகள் இருந்தாலும் அதை ஏமாற்றி தவறு செய்வதில் ஒரு சுவாரசியம். நானும் விடுதில் இருந்து தப்பித்து ஒரே ஒரு படம் பார்த்தேன்.அந்த படப் பெயர் லிட்டில் ஜான் . நான் முதன் முதலில் விடுதியை விட்டு ஈரோடு சென்று பார்த்த படம் அது தான். நான் சென்று வந்த சில நாட்களில் என் நண்பர்கள் பலர் வெளியில் சென்று மாட்டி கொண்டார்கள். மாட்டிகொண்ட அவர்களின் நிலை மிக மோசமானது.  (V.V.H.S.S பள்ளி தனியாக ஒரு ப்ளாக் எழுதுகிறேன். for  நண்பன் suganthan )

நான் படிக்கும் பொழுது மதிப்பெண் மிகவும்  கம்மியாக வாங்குவேன். என்னுடைய அப்பா, அம்மா கேட்கும் பொழுது அடுத்த பரிட்சியில் நன்றாக படித்து நிறைய மார்க் வாங்குவேன் எண்டு சொல்லுவேன். இன்று வரை அவர்கள அதை மறக்கவில்லை.     
ஆனால் நான் சொன்ன மாதிரி நல்ல மதிப்பெண் தான் எடுத்தேன். எனக்கும் என் அத்தை பொண்ணுக்கும் யார் அதிக மார்க் எடுப்பது என்ற போட்டி , நான் தான் கடைசியில் வெற்றி பெற்றேன்.  ரிசல்ட் வந்த நாமே என்னால் மறக்க முடியாது. எல்லோரும் என் மார்க்கை பரடினர்கள் , ஆனால் என் தாதா மட்டும் இன்னும் ஒருமுறை மார்க் செரி பார்க்க சொன்னார். அவர் சொன்னது போலவே நான் எடுத்தது 919 மதிப்பெண். முதலில் சொன்னது 991. என்னை பற்றி அவருக்கு நன்றாக தெரிந்து உள்ளது.பின்பு கவுன்செல்லிங் முலம் திருச்சி பாரதிதாசன் பல்கலைகலத்தில் சேர்ந்தேன்.

மற்றவை அடுத்த ப்ளோகில் (மறக்க முடியாத தருணங்கள் -  part4)

Wednesday, April 7, 2010

மறக்க முடியாத தருணங்கள் - part 2

என்னுடைய அனுபவங்கள் பாகம் 2 . திருச்சி சின்மயா வித்யாலயாவில் படித்தது, லூர்து சாமீ பிள்ளை தெரு வில் இருந்தது, ராணி , மகேந்திரன், செந்தில்,தேன், பாலாஜி அண்ணன், இவர்களுடன் கிரிக்கெட்  விளையாடியது, மற்றும் எனது பிறந்த நாளை நான்  கேக் வெட்டி கொண்டாடியது, முதன் முதலில் வீட்டில் டிவி வாங்கியது, அதில் ஒளியும் ஒளியும் சான்றகந்தா, போன்ற நிகழ்ச்சிகள் சண்டே காலையில் அனைவரும் குடும்பத்தோடு உட்கார்து டிவி பார்போம்.

ராஜா என்ற நண்பனோடு விளையாடும் பொது அவன் கிழே விழுந்து பல் உடைந்ததும், அந்த சம்பவத்திற்கு நான்,என் அண்ணன், இருவரும் தான் காரணம் என்று யாருக்கும் இது வரை தெரியாது. மற்றும் விளையாடும் பொது ஒரு வாகனத்தின் கண்ணாடி உடைத்தது அதற்கும் காரணம் நான் தான் என்றும் யாருக்கும் தெரியாது.

திருச்சியில் இருந்த பொது துணி கடை வைத்து இருந்தோம் , அப்பொழுது அங்கு வருபவர்களிடம் துணி விற்றது, மற்றும் கடைக்கு செல்லும்போது அப்பா , அம்மா, இருவரும் எதாவது bakery யில் வாங்கி தருவார்கள். அங்கு பாகத்து கடை வைத்திருக்கும் பட்டு, என்பவர் இன்னும் எங்களை ஞாபகம் வைத்து இப்பொழுது வந்து பார்த்து விட்டு போனார்கள். சுமார் ஒரு 15 வருடம்  கழித்து  வந்து பார்த்தார்கள் எனபது ரொம்ப அச்யர்யமாக இருந்தது.

பள்ளியில் படிக்கும் பொது நானும் எனது அண்ணனும் பேச்சு போட்டியில் கலந்து கொண்டோம், நான் மலை பற்றி பேசுவது என்றும் எனது அண்ணன் வள்ளுவர் பற்றி பேச முடிவு செய்து, எல்லாம் படித்து கொண்டு சென்றோம், ஆனால் அங்கு நான் தலைப்பை மாற்றி அங்கு சொதப்பி விட்டேன். நான் திருச்சியில் படித்த காலத்தில் 3 பேரிடம் டியூஷன் படிதேன், அதில் மறக்க முடியாதது ரமா மேடம், அவர்களிடம் தான் ஹிந்தியும் கற்று கொண்டேன். அன்கு கற்று கொண்ட ஹிந்தி தான் இன்று வரை எனக்கு உபயோகமாக இருகின்றது.

திருச்சியில் படிக்கும் பொது தான் எனக்கு நாய்கள் வளர்த்த வேண்டும் என்ற ஆவல் வந்தது, அதற்கு காரணம் எனுடை நண்பன் விஜய், அவன் அப்பொழுது எனிடம் நிறைய நாய் , மற்றும் பல விலங்குகள் அவன் வீட்டில் இருகின்றது என்றும் அது சாகசங்கள் செய்யும் என்றும் பொய் சொல்லி எனது ஆசையை வளர்த்து விட்டான்.  கொஞ்ச நாள் சென்று தான் அவன் கூறியது எல்லாம் பொய் என்று தெரிந்தது. நெப்போலியன் , சந்துரு , பிரேம் குட்டன், ராம்குமார் , என்று பல நண்பர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்களில் யாருடனும் இப்பொது தொடர்பு இல்லை.  நான் திருச்சியில் நான்கு வருடம் படிதேன்  , பின்பு கரூர் வந்துவிட்டேன்.(to be continued on மறக்க முடியாத தருணங்கள் -  part 3)

Monday, April 5, 2010

மறக்க முடியாத தருணங்கள் - part 1

நம் எல்லோர் வாழ்விலும் எதாவது சில மறக்க முடியாத தருணங்களாக இருக்கும். என்னக்கும் சிறு வயது முதல் அப்படி சில நிகவுகள் இருக்கின்றன.அப்பொழுது அவை என் மனதில் பதிந்தவை. இன்னும் என் மனதில் இருகின்றது.

சின்ன வயதில் நான், என் அண்ணன், மாது,பிரபா எல்லோரும் ஒரே பள்ளிக்கு சென்றது, பள்ளி முடிந்து வரும் போது எங்களை அழைத்து வர பண்ணையில் வேலை பார்பவர்கள் வருவார்கள். அவர்களில் யார் எங்களை வீட்டிற்கு முதலில் அழைத்து வருகிறார்கள் என்ற போட்டி இன்னும் மறக்க முடியாது. அது போல குடும்பத்தில் உள்ள எல்லோரும் படம் பார்க்க பரமத்தி சினிமா கொட்டகைக்கு செல்வோம். சின்ன வயதில் அது ஒரு திருவில்லா போல் இருக்கும். வண்டி மாடு கட்டி அனைவரும் செல்வோம். எனக்கு படத்திற்கு செல்வது என்றால் கொஞ்சம் பயம். அதனால் நானும் என்னுடைய பெரியப்பாவும் வீட்டில் சில சமயம் செல்லாமல் இருப்போம்.

சின்ன வயதில் அம்மா அல்லது அப்பா அடித்தார்கள் அல்லது சண்டை போட்டார்கள் என்றால் அப்பா வந்து சமாதனம் செய்வது, இல்லை என்றால் பெரியப்பா சமதானம் செய்வது, சாப்பிடாமல் படுத்தால் பிள்ளையார் கிணற்றில் தண்ணீர் சுமக்க வைத்து விடுவார் என்ற பயமுடுத்துவது, தட்டில் சாப்பாடு ஊரண்டையாக வைத்து அதை காக்கா  சாபிட்டது என்று சொல்லி சாப்பாடு  சாபிட்டது போன்று பல விஷயங்கள் இன்னும் மனதில் இருக்கின்றன.

சுவற்றில் உள்ள சுண்ணாம்பு சுரண்டி தின்னது, தின்னாமல் இருபதற்காக அதில் எதாவது மிளகாய் அல்லது வேறெதுவோ வைத்தார்கள். சிலைய்டு பென்சிலை திட்று விட்டு தினமும் ஒரு புது பென்சில் கேட்பது, அப்புறம் பள்ளி செல்லும் பொழுது வைற்று வலி என்று பள்ளி செல்லாமல் வீட்டில்  இருப்பது போன்ற நினைவுகள் இன்றும் நினைத்தால் சந்தோசமாக இருகின்றது.

மறக்க முடியாத தருணங்கள் என்று ஒரு ப்ளாக் எழுதலாம் என்று தான் எண்ணினேன் ஆனால் நிகழ்வுகள் நிறைய இருப்பதால் மற்றதை அடுத்த ப்ளோகில் எழுகிறேன். (to be continued .............மறக்க முடியாத தருணங்கள் -  part 2)

Wednesday, March 17, 2010

விடுமுறை நாட்கள் வீட்டில் களிக்க ஆர்வம்

நான் பள்ளியில் படித்த காலத்தில் இருந்து எப்பொழுது விடுமுறை விடுவார்கள் என்று நாள், மணி கணக்கு போட்டு கொண்டு இருப்பேன். விடுதியில் தங்கி படித்த காலத்தில் எபொழுது வீட்டிற்கு வருவோம் என்று கணக்கு போட்டு கொண்டு இருப்பேன்.

படிக்கும் காலத்தில், பள்ளியில் இருந்து தப்பித்து வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்தது. வீட்டிற்கு செல்வதற்கு முதல் நாள் இரவு உறக்கம்  வராது. கலையில் நேரமாக எழுந்து எப்பொழுது மதியம் வரும் என்று காத்துகொண்டு இருப்பேன். பள்ளியில்ம் இருந்து எனது வீட்டிற்கு 2 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். பள்ளியில் இருந்து மாதம் ஒரு முறை பள்ளி வாகனத்தில் கரூர் வந்து விடுவார்கள். ஆனால் dayscholar மாணவர்களை விட்டு விட்டு தான் அழைத்து  செல்வர்கள். அந்த 1 மணி நேரத்தை வீட்டில் சென்று களிபதற்காக அரசு பேருந்தில் அடித்து பிடித்து வீட்டிற்கு செல்வேன்.

விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி செல்லும் பொழுதும் போகுவதர்கே மனது இருக்காது. பல முறை பாதி வழியில் திரும்பி வந்து இருகின்றேன். நான் கல்லூரியில் படிக்கும் பொழுதும் என்னை கல்லூரில் கேட்பதற்கு ஆல் இல்லாததால் அடிக்கடி வீட்டிற்கு வந்து விடுவேன்.

இப்பொழுது நான் மும்பாயில் வேலை பார்த்து கொண்டு இருகின்றேன். இப்பொழுதும் கரூர் செல்லவதற்கு லீவ் எடுக்க முடிவு செய்து விட்டால் ஊருக்கு செல் கின்ற நாள் வரை எப்பொழுது ஊருக்கு செல்வோம் என்ற நினைப்பு தான் அதிகம் இருகின்றது. இன்னும் ஊருக்கு செல்ல எத்தனை நாட்கள் என்று எண்ணி கொண்டு தான் இருகின்றேன். எவ்வளவு தான் வளர்ந்தாலும் இந்த எண்ணம் மட்டும் மாறவில்லை.

இன்னும் 20 நாட்கள் தான் இருகின்றது. நான் ஊருக்கு செல்வதற்கு. அதனால் தான் இந்த திடீர் ப்ளாக்.

Thursday, March 11, 2010

நிறைவேறாத pilot கனவு

சிறு வயதில் இருந்து pilot ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. நான் சின்ன வயதில் இருந்து கண்ணாடி அணிந்து வருகின்றேன். நான் 12th முடித்த பிறகு சேரலாம் என்று நினைதேன், ஆனால் பார்வை குறைவால் செல்ல முடியாது என்று நினைத்து செல்லாமல் இருந்து விட்டேன்.ஆனால் நான் கல்லூரியில் படிக்கும் பொழுது தான் கண்பார்வை குறிப்பிட்ட அளவு இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.

கல்லூரியல் படித்து முடித்தவுடன் madras flying club சென்று அப்ப்ளிகாடின் வங்கி பில் பண்ணி கொடுத்தேன். செலவு சுமார் 20 லட்சம் வரும் என்பதால் அந்த முடிவை அப்போதைக்கு விட்டு விட்டேன். வீட்டிலும் என்னால் வற்புறுத்த முடியாத நிலை. இருந்தாலும் நான் சின்ன வயதில் இருந்து pilot ஆக வேண்டும் என்ற கனவை விட முடியவில்லை.

இப்பொழுதும் விமானத்தில் ஏறும் பொழுதும் , பார்க்கும் பொழுதும் என்னுடைய நிறைவேறாத கனவு என்னை வாட்டுகிறது. இப்பொழுது நான் pilot ஆக ட்ரை பணிகொண்டு தான் இருகின்றேன். எதாவது ஒரு aviation அகாடமி பார்த்தல் pilot ஆகுவதற்கு எவளவு ஆகும் என்ற தான் பார்கின்றேன். முதலில் ஏன் பார்வையை சரிசைத்து கொண்டும், pilot ஆகுவதற்கு உண்டான பணத்தை சேர்த்து கொள்ள முயற்சி செய்து கொண்டு இருகின்றேன்.


pilot ஆக வேண்டும் என்ற கனவு நிறைவேறுகிறதா இல்லை அது வெறும் கனவாக மட்டும் இருக்குமா என்று தெரியவில்லை. முடிந்த வரை முயற்சி செய்து கொண்டு தான் இருப்பேன்.

Wednesday, February 17, 2010

மும்பை ரயில் வாழ்கை

மும்பை பற்றி குறிப்பிட வேண்டும் என்றால் , மும்பை மக்கள்லின் முதுகு எலும்பாக விளங்குவது மும்பை ரயில். ஒரு மணி நேரம் ரயில் ஓட வில்லை என்றால் மும்பை மிகவும் சிரமப்படும். நானும் இந்த ரயிலில் கடந்த நான்கு ஆண்டுகளாக பயணம் செய்கின்றேன்.

ஆரம்பத்தில் ரயிலில் ஏறி இடம் பிடிபதற்கு மிகவும் சிரமப்பட்டேன். பின்னர் ஸ்டார்டிங் ரயில் பிடித்து சென்று வந்தேன். தினமும் காலை 8:15 ரயில் பிடிக்க ரயில் ஷேட் சென்று ஓடு ரயிலில் தொங்கி கொண்டு ஏறி ஜன்னல் ஓர இருக்கை பிடித்து சென்று வந்தேன்.

ரைல்லின் பயணம் செய்யும் பொழுது நிறைய நபர்களை சந்திக்க நேரும். ஒரு சிலர் செஸ் விளையடி கொண்டு வருவார்கள், ஒரு சிலர் கார்ட்ஸ் விளையாடி கொண்டு வருவார்கள். பலர் கடுவுளின் பக்தி பாடல்களே படி கொண்டு வருவார்கள். அவர்கள் பாடும் பொழுது மோளம் , ஜால்ரா போன்றவற்றை பயன்படுத்தி மிகவும் சத்தமாக படுவார்கள். சில நேரம் நன்றாக இருத்தலும் பல நேரம் எரிச்சலாக தான் இருக்கும்.


இங்கு ரயிலில் குடம் குறைவாக இருந்தால் அதை நிரப்புவதற்கு எண்டுறாய் சில station இருக்கின்றன. எந்த நேரம் ரயில் சென்றாலும் ரயிலில் இடம் இல்லாத அளுவுக்கு ஆட்கள் ஏறுவார்கள். சிலர் ஜன்னல்களில் தொங்கி கொண்டும் , குறை மேல் உட்கார்ஹு கொண்டும் வருவார்கள். அதே சமயம் நிறைய இறப்புகளும் தினமும் நடக்கின்றன. அதிகம் குட்டம் இருந்தால் சண்டைகளும் நடக்கும்.

தினமும் ரயிலில் பயணம் செய்வது எனபது ஒரு ஜாலி யான அனுபவம். இங்கு 5 நிமிடகளுக்கு ஒரு ரயில் ஓடினாலும் குட்டம் குறைவது இல்லை. சில virar fast ரயில் களில் இடையில் இருக்கும் ரயில் நிலையங்களில் இறங்கும் ஆட்கள் இருதால் அவளவுதான். ஆண்கள் கம்பர்த்மேண்டில் மட்டும் அல்ல பெண்கள் கம்பர்த்மேண்டும் காலை முதல இரவு இதே நிலைமை தான். ஆண்களுக்கு இணையாக அவர்களும் படிகளில் தொங்கி கொண்டு செல்கிறார்கள்.

எந்த ஒரு தீவிரவாத செயல்களுக்கும் ரயில் சேவை சுமார் 1-2 மணி நேரம் நிறுத்தி வைத்து விட்டு மீண்டும் ஆரம்பித்துவிடுவார்கள். அணைத்து சிக்னல்களும் ஆட்டோமாடிக். மற்றும் பல நேரங்களில் குறித்த நேரத்தில் ரயில் station வந்துவிடும். இது என்னக்கு அர்ச்சரியம் தரும் விஷயமாக இருக்றது. நமது இந்தியாவிலும் இது போல கரெக்ட் டைம் பொல்லோ பண்ணுவது எனக்கு ரொம்பவும் ஆச்சர்யமாக இருகின்றது.

ஆனாலும் சில குறைகள் இருக்கின்றன. மக்கள் ரில்லை சுத்தமாக வைத்திருக்க உதவுவது இல்லை.பாக்கு போட்டு எச்சில் துப்புவது , இருக்கைகளை செதபடுதுவது போன்ற நடவடிக்கை கலை ரயில்வே நிர்வாகம் தண்டனை கொடுத்து தடுக்க வேண்டும்.

மொத்தத்தில் மும்பை ரயில் அனைவருக்கும் வாழ்கையில் ஒரு அங்கமாக இருக்கும்.